சென்னை பல்கலை.யில் கிறிஸ்தவ சொற்பொழிவு நிகழ்ச்சி ரத்து; பின்னணி என்ன?

3 hours ago
ARTICLE AD BOX

சென்னைப் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவத்தை பரப்புவது தொடர்பான சொற்பொழிவு நடத்தும் விவகாரம் சர்ச்சையானதால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. கிறிஸ்தவ சொற்பொழிவு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட சர்ச்சையின் பின்ணி என்ன என்று இங்கே பார்ப்போம்.

Advertisment

சென்னை பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்பில் சுப்ரமணிய ஐயர் அறக்கட்டளை சொற்பொழிவு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த கல்வியாண்டில், சென்னை பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்பில் சுப்ரமணிய ஐயர் அறக்கட்டளை சொற்பொழிவுக்காக, இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை பரப்புவது எப்படி, இந்த மார்க்கம் ஏன் தேவை ஆகிய தலைப்புகளில் மார்ச் 14-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்த சொற்பொழிவு சென்னைப் பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் பிற்பகல் 2 முதல் 5 மணி வரை நடத்ட் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில், பொறியாளர் கே.சிவக்குமார் சிறப்பு விருந்தினராக உரையாற்றுவதாக துறைத் தலைவர் (பொறுப்பு) ஜே.சவுந்தரராஜன் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு கல்வியாளர்கள், பேராசிரியர்கள், வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் உட்பட பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன. 

Advertisment
Advertisements

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மதத்தை பரப்புவது குறித்த கருத்தரங்கம் நடத்தப்படுவது மாணவர்கள் மத்தியில் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை ரத்து செய்து, அதற்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டதால், இந்த நிகழ்ச்சியின் அறிவிப்பு சர்சையானது.

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சி குறித்து விளக்கம் கேட்டு சென்னை பல்கலைக்கழகத்துக்கு ஆளுநர் மாளிகை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால், சென்னைப் பல்கலைக்கழகத்தின் இந்த நிகழ்ச்சி பெரும் சர்ச்சையானது.

இதற்கு விளக்கம் அளித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.ஏழுமலை. ஆளுநரின் தனிச் செயலருக்கு அனுப்பிய கடிதத்தில், “பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சுப்ரமணிய ஐயர் அறக்கட்டளை சொற்பொழிவை நடத்துவதற்கு பல்கலைக்கழகத்திடம் முறையான அனுமதி பெறப்படவில்லை. எனவே, இந்த நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு சம்மந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவர் சவுந்திரராஜன், நிர்வாக காரணங்களுக்காக சுப்ரமணிய ஐயர் அறக்கட்டளை சொற்பொழிவு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டார்.

மேலும், சர்சையான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கான நோக்கம் தொடர்பாக பேராசிரியர் சவுந்திரராஜன், பல்கலைக்கழக பதிவாளருக்கு கடிதம் மூலமாக வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read Entire Article