ARTICLE AD BOX
செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
சென்னை மதுரவாயல் கன்னியம்மன் நகர் நான்காவது தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருப்பவர் சந்திரகுமார் (40). இவரது மனைவி சீதா (34). இன்று காலை தங்கள் குழந்தைகளை டியூஷனுக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே வந்து பார்த்த போது, நகை பெட்டி திறந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சீதா தனது கணவர் சந்திரகுமாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வீட்டில் தேடிப்பார்த்த போது, வீட்டில் இருந்த பத்து சவரன் தங்க நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே மதுரவாயல் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தடவியல் நிபுணர்கள் உதவியுடன் சோதனை செய்தனர்.
மேலும் இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.