ARTICLE AD BOX
பெரம்பலூர்: சென்னையில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு ஆம்னி பஸ், நெல்லை மாவட்டம் பாபநாசம் சென்றது. அம்பாசமுத்திரத்தை சேர்ந்த அய்வர் ராஜா(30) பஸ்சை ஓட்டினார். மாற்று டிரைவர், கண்டக்டர் மற்றும் 23 பயணிகள் பயணித்தனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா சின்னாறு அருகே நள்ளிரவு 12.30மணி அளவில் பஸ் சென்றபோது, பின்புற இடது பக்க டயர் திடீரென வெடித்தது. சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து பதறியடித்து விழித்த பயணிகள் அலறினர். டிரைவர் அய்வர் ராஜா, சாதுர்யமாக செயல்பட்டு சாலை ஓரத்தில் பஸ்சை நிறுத்தினார். பயணிகள் அவசரமாக உடமைகளை எடுத்து கொண்டு கீழே இறங்கி ஓடினர். டயர் வெடித்ததில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அனைத்து பயணிகளும் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சிறிது நேரத்தில் பஸ் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்து நாசமானது.
The post சென்னை ஆம்னி பஸ் எரிந்து நாசம் பயணிகள் தப்பினர் appeared first on Dinakaran.