'செந்தமிழ் பாடல்' எப்படி இருக்க வேண்டும்?

2 hours ago
ARTICLE AD BOX

செந்தமிழ் பாட்டு என்றால் என்ன? ஒரு பாட்டை அழகாக இசையமைக்கிறார்கள் என்றால், அந்த செந்தமிழ் பாட்டு, சிறப்பாக இருப்பதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்? அப்படி எந்தெந்த தகுதிகள் இருந்தால் அதை செந்தமிழ் பாட்டு என்று கூறலாம்? ஒரு பாடல் மூலம் அதன் கருத்தைப் பார்க்கலாம்.

பாடல் கலையில் வல்லவன் என்பதற்கு கூறப்படும் விதிமுறைகள் இது:

பாடற் கலை என்பது பாட்டு இயற்றும் கலையை மட்டுமல்லாமல் பாடலை இசையோடு பாடும் இசைக்கலையையும் சேர்த்து தான் குறிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பல உலக நாடுகள் தடை செய்த, தற்கொலை உணர்வை ஏற்படுத்திய பாடல்
Senthamil song

இயற்கை உணர்வால் எழுச்சியும் உணர்வும்

மயலறப் பொருந்தி கற்பனை திகழ்ந்தே

பற்பலர் புகழப் பாடும் வகையில்

பொற்புறப் பாடுவோன்

பாட வல்லவனே

என்கிறது - ஒரு பாடல்.

இணரூழ்த்தும் நாறா மலர் அனையர்

கற்றது உணர விரித்துரையாதார்

என்கிறது திருக்குறள்.

பாடல் எழுதும் திறம் பெற்றிருந்தால் மட்டும் போதாது. எழுச்சியும் உணர்ச்சியும் அமைய பெற்று, தெளிந்த நிலையில் எழுதிய பாடலை சான்றோர் முன் விளக்கி கூறுமளவுக்கு தெளிவாகவும் இருக்க வேண்டும். மேலும் அவர்களுடைய பாராட்டையும் பெற வேண்டும் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

இயல்பாகவே எழும் ஓர் உந்துதல் உணர்வால், தெளிந்த நிலையில் எழுச்சி, உணர்வும் வாய்க்கப் பெற்றவனாய், இவற்றின் காரணமாக உருவாகும் கற்பனை திறம் திகழப்பெற்று, அறிஞர் பலராலும் புகழப்படும் முறையில் பாங்காகவும், பொலிவாகவும் பாடும் ஆற்றல் உள்ளவனே, பாடல் கலையில் வல்லவன் என என்பதுதான் இதன் விளக்கம்.

இதையும் படியுங்கள்:
பழைய கதை புதிய கதைப் பாடல்
Senthamil song

செந்தமிழ்ப் பாடல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான செய்யுள் இதோ:

இனிமை எளிமை இன்பம் பயப்பதாய்

தனிமைச் சிறப்பும் சொற்பொருள் அழகும்

தோன்றாப் புதுப்பொருள்

தோன்றக் காட்டித்

தோன்றும் நுட்பம் திட்பமும் விளக்கி

ஆன்றவிந்து அடங்குவோர் அகப்புறம் நாடி

ஏன்றுகொள் இயல்பில் எண்கலை திகழ

ஆய்தொறும் அணி பொருள் விளங்கத் தோன்றி

மூவாத் தன்மை முகிழ்பெற்று இலங்கிப்

பண்பைத் தெரிக்கும் செந்தமிழ்ப் பாடலே

என்கிறது ஐந்திறம் என்னும் நூல்.

செந்தமிழ்ப் பாடல் என்பது இனிமை, எளிமை, இன்பம் முதலிய நயங்களோடு கூடியதாகவும், தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், சொற்பொழிவும், பொருட்பொலிவும் பொருந்தப் பெற்றதாகவும், மற்றோரால் இதுவரை வெளிப்படுத்தப்படாத புதுப் பொருளை விளக்கமாகக் காட்டுவதாகவும், படிக்கும் தோறும் படிக்கும் தோறும் புலனாகக் கூடிய நுட்பமும் திட்பமும் விளங்குவதாகவும், பிண்டத்தின் இயல்பையும், அண்டத்தின் இயல்பையும், ஆய்ந்து புலனடக்கம் வாய்க்கப் பெற்றுள்ள நிறைஞானப் பெருமக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும், ஆராயும் தோறும் எண்கலை திகழுமாறு உள்ள பல்வகை அணிகளும் (அலங்காரங்களும்) தோன்றி விளங்குவதாகவும், எக்காலத்துக்கும் பொருந்துமாறு உள்ள கருத்து வளம் மலர்ச்சி பெற்று விளங்குவதாகவும், முழுமைத் தன்மை என்பது இதுதான் என்பதை தெரிவிக்கக் கூடியதாகவும் திகழும்.

இப்படிப்பட்ட சிறப்பு பெற்றவையாக இருப்பதைத் தான் செந்தமிழ் பாடல் என்று கூறப்படுகிறது.

Read Entire Article