விஜய் – பாமக உடன் கூட்டணி பேச்சு? உண்மையை உடைக்கும் செம்மலை!   

3 hours ago
ARTICLE AD BOX

2026 தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு வலுவான கூட்டணியை அமைப்பார், அந்த கூட்டணி திமுகவை விட வலுவானதாக இருக்கும் என்றும் முன்னாள் அமைச்சர் செம்மலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமைக்கவுள்ள கூட்டணி தொடர்பாக அக்கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-  இன்றைக்கு இருக்கும் எதார்த்த அரசியல் என்ன தெரியுமா? ஒவ்வொருத்தரும் இன்று கட்சியை தொடங்கி விட்டனர். ஒவ்வொருத்தரும் தலைவர். எந்த காரணமும் இல்லாமல் எந்த நோக்கமும் இல்லாமல் கட்சி ஆரம்பித்துவிட்டனர். ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் இருப்பவர்கள் பல கட்சிகளாக பிரிந்து கிடக்கின்றனர். அப்படி பிரிந்து கிடப்பவர்கள் ஒன்று சேர்ந்ததால்தான் ஆளுங்கட்சியை நாம் வீழ்த்த முடியும். அதனால் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்று, 2 என்று இல்லாமல், ஒரு கூட்டணியை வலுவாக அமைத்தாலே வெற்றியை ஈட்டுவதற்கு வழி இருக்கிறது. எனவே 2026 தேர்தலை பொறுத்தவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிச்சயமாக ஒரு வலுவான கூட்டணியை அமைப்பார். அந்த கூட்டணி திமுகவை விட வலுவானதாக இருக்கும். இன்றைக்கு திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய சில கட்சிகள் அதில் இருந்து விலகுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

அதிமுக

கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியாது என்கிற நிலைக்கு நாங்கள் மட்டும் அல்ல எல்லோரும் தள்ளப்பட்டிருக்கிறோம். திமுகவும் இன்று தேர்தலில் தனித்து போட்டியிட முடியாது. காரணம் ஓட்டுகள் சிதறுகிறது. அதனால் சிதறுகிற ஓட்டுகளை, எங்களுக்கு ஒத்து இருக்கிற, ஒத்து இருக்கிற மனநிலையில் இருக்கிற அல்லது எங்களது தலைமையை ஏற்றுக்கொள்கிற கட்சிகளை ஒன்றிணைத்து, ஒரு கூட்டணி அமைக்கிறபோது நிச்சயமாக அந்த வெற்றியை 2026ல் பெறுவோம். அதிமுக ஆட்சி அமைப்போம். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஆக்குவோம். அப்போது நீங்கள் எழுப்பும் கேள்விக்கு பதில் எடப்பாடியார் எப்படி வெற்றி பெற்றார் என்ற அந்த வரலாற்றை வெற்றி சொல்லும்.

பா.ஜ.க. கூட்டணி குறித்து மறுபரிசீலனை?- கூடுகிறது அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!Photo: ADMK

2024 நாடாளுமன்ற தேர்தலில் பெரிய கூட்டணி அமையும் என அதிமுக எதிர்பார்த்த நிலையில் அது அமையவில்லை. அன்றைய நிலை வேறு, இன்று இருக்கும் நிலை வேறு. நாடாளுமன்றத் தேர்தலுக்கு கால அவகாசம் அதிகமாக இருந்ததால், கட்சிகளை ஒருங்கிணைக்க முடியவில்லை. இப்போது தேர்தல் நெருங்குகிறது. இப்போது அவர் அவர் உயரம் எல்லாருக்கும் தெரியும். தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுகவுக்கு மாற்று அதிமுக. அதுதான் எதார்த்தமான இன்றைய நிலவரம். எனவே எந்த கூட்டணி 2026ல் எப்படி அமைந்தாலும் ஆளுங்கட்சி திமுகவுக்கு எதிராக அமைய போகிற கூட்டணிக்கு நிச்சயமாக அதிமுக தான் தலைமை தாங்கும். காரணம் அதுதான் பிரதான கட்சி. இன்று நிறைய கட்சிகள் திமுகவுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். அந்த மனநிலையில் இருக்கிறவர்கள் எல்லாம் தனித்து போட்டியிடுகிறபோது, வாக்குகள் சிதறுகிறது. யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நினைக்கிறமோ அவர்கள் வந்துவிடுவார்கள் என்று அப்படிப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் சிந்தித்து, எங்களுடன் கூட்டணி வருவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. அப்படி அமைகிறபோது, அதிமுக பொதுச்செயலாளருக்கு இருக்கும் பிரச்சினை என்னவாக இருக்கும் என்றால், அவர்களில் யாரை கூட்டணிக்கு தேர்வு செய்வது, யாரை வேண்டாம் என சொல்வது என்பதாகத்தான் இருக்கும்.

த.வெ.க முதல் மாநாடு.... தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த திரை பிரபலங்கள்!

தவெக உடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என கேள்விகள் எழும் நிலையில், உறுதியாகவும் அருதியாகவும் சொல்கிறேன் 2026ல் அமையப் போகிற கூட்டணிக்கு எங்கள் கட்சிதான் தலைமை தாங்கும். எங்களுடைய தலைமையை ஏற்றுக்கொள்கிற கட்சிக்கு தான் எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் வாய்ப்பு இருக்கும். அவரவர் கட்சியில் நாங்கள் தான் தலைமை தாங்குவோம் என்றால், அது அவர்களது தனி வழி. பாமக கவுரவ தலைவர் ஜி.கே. மணி – எடப்பாடி பழனிசாமியை சதித்ததால் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி அமையுமா? என விவாதங்கள் எழுகின்றன. நான் சேலத்துக்காரன், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சேலத்துக்காரர். ஜி.கே.மணி எடப்பாடியாரை சந்தித்தபோது, நானும் அவரது வீட்டில்தான் இருந்தேன். அவர் என்ன காரணத்திற்காக வந்தார் என்பது நேரில் பார்த்த எனக்கு தெரியும். தன்னுடைய பேரன் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க ஜி.கே.மணி வந்தார். அந்த சந்திப்பின்போது இருவரும் அரசியல் பேசுவதற்கு வாய்ப்பே இல்லை. பாமக கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளதா? என்றால், அதிமுகவுடன் பல கட்சிகள் கூட்டணிக்கு வருகின்றன. பல கட்சிகள் வருவதற்கும் வாய்ப்பும் உள்ளது.

பாமகவின் எழுச்சியும் வீழ்ச்சியும் - என்.கே.மூர்த்தி

எடப்படியாரின் அறிக்கை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ள டிடிவி தினகரன், துரோகி என்றால் அது இபிஎஸ் தான் என்று தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று சொல்வதற்கான தகுதி நிச்சயமாக டிடிவி தினகரனுக்கு கிடையாது. ஒரே வேளை அந்த துரோகி என்ற வார்த்தை, ஏன் அவருக்கு பிடிக்கிறது என்றால்?, அவர் எத்தனை பேருக்கு துரோகம் செய்துள்ளார் என்று தெரிய வில்லை. ஆனால் அந்த வார்த்தை எடப்பாடியாருக்கு நிச்சயமாக பொருந்தாது. டிடிவி தினகரன், எடப்பாடியார்  மீது இருக்கிற காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரை இப்படி சொல்கிறார். நிச்சயமாக அந்த துரோகத்திற்கு எடப்பாடியாரை உதாரணம் காட்டுவது தவறு. டிடிவி தினகரன் அவ்வாறு சொன்னால் அது கண்டிக்கத்தக்கது, இவ்வாறு அவர் தெரிவித்தார்

Read Entire Article