ARTICLE AD BOX
செகண்ட் சான்ஸ் ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா !!
கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில், ஸ்ரீ பி இசையில், கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில், ஜிவி பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர் மற்றும் ரக்ஷிதா குரல்களில்A Spot Light Entertainment தயாரிப்பில் சபரி மணிகண்டன் இயக்கத்தில், வாழ்வில் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசும் அழகான ஆல்பம் பாடலாக உருவாகியுள்ளது செகண்ட் சான்ஸ்...*
மகேஷ் சுப்பிரமணியம், அம்மு அபிராமி நடித்துள்ள இப்பாடல் இன்று படக்குழுவினர் கலந்துக்கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது.

இளம் நட்சத்திரங்களான ரியோ, மாஸ்டர் மகேந்திரன் மற்றும் சௌந்தர் இவ்விழாவில் கலந்துகொண்டு பாடலை வெளியிட்டு, படக்குழுவை பாரட்டினர்.
இந்நிகழ்வினில்
நடிகர் ரியோ கூறியதாவது..
இந்த பாடலில் மகேஷ் மற்றும் அபிராமி இருவரின் பர்ஃபாமன்ஸ் மிகப்பிரமாதமாக இருக்கிறது. நானும் மகேஷும் ஜோடி ரியாலிட்டி ஷோவில் ஒன்றாக பங்கேற்றோம்.
ஜிவி பிரகாஷ் மற்றும் நரேஷ் ஐயர் உடைய பாடல்கள் தனித்தனியாக பிரம்மாதமாக இருக்கும். இதில் அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் பாடி இருக்கிறார்கள். அது இன்னும் அற்புதமாக இருக்கிறது. ஹூக் ஸ்டெப்-க்கு பெயர் போன ஸ்ரீதர் சார் உடைய நடன அமைப்பு இதில் பிரம்மாதமாக இருக்கிறது. இந்த பாடல் கேட்பதற்கு கேட்சியாகவும், ரசிக்கும் படியும் இருக்கிறது. ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள்.
நடன அமைப்பாளர் ஸ்ரீதர் கூறியதாவது..
மகேஷ் மற்றும் அம்மு அபிராமி இருவரும் மிக அழகாக நடித்து இருக்கின்றனர். கதையின் கருவை அவர்கள் தெளிவாக வெளிக்காட்டியுள்ளனர். இசையமைப்பாளர் உடைய கடின உழைப்பு, இந்த பாடலை மெருகேற்றியுள்ளது. ஜீவி பிரகாஷ் மற்றும் நரேஷ் உடைய குரலில் இந்த பாடல் மேலும் சிறப்பாக மாறியுள்ளது. இயக்குநர் மான்டேஜ் மற்றும் நடன அமைப்புகள் என இரண்டையும் சிறப்பாக கோர்த்துள்ளார். இந்த குழு மேலும் நிறைய படங்களை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். படக்குழுவை வாழ்த்துக்கிறேன்.
நடிகை அம்மு அபிராமி கூறியதாவது..,
இங்கிருக்கும் அனைவரும் திறமையானவர்கள் என்பதைத் தாண்டி, அன்பானவர்கள். இந்த பாடல் குழு, ஒரு குடும்பமாக செயல்பட்டு, இந்த பாடலை உருவாக்கி இருக்கின்றனர். இந்த படக்குழுவுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி.. புதுமுக கலைஞர்களுக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. குரல் கொடுத்த ஜீவி பிரகாஷ், நரேஷ் மற்றும் ரக்ஷித்ராவிற்கு நன்றி. ஸ்ரீதர் மாஸ்டர் மிகவும் நேர்த்தியான முறையில் பாடலை உருவாக்கி கொடுத்துள்ளார். அனைவருக்கும் என் நன்றிகள் .