ஜோதிகா

அஜித்தின் வாலி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், முகவர் , குஷி என அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறினார். வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு படங்களில் நடித்து செம பிஸியான நடிகையாக இருந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்தைத் தொடர்ந்து நடிப்பை கைவிட்ட ஜோதிகா மறுபடியும் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

மகளிர் மட்டும் , ராட்ச்சசி , பொன்மகள் வந்தாள் என தமிழ் சினிமாவில் இரண்டாம் ரவுண்டில் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா . தற்போது இந்தியில் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாக இருக்கும் டப்பா கார்டெல் வெப் சீரிஸில் நடித்துள்ளார் ஜோதிகா. இந்த சீரிஸின் ப்ரோமோஷனின் போது தனது திரை வாழ்க்கை மற்றும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகிறார்.

சினிமாவில் செக்சிஸம் சகஜமாகிடுச்சு

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜோதிகா சினிமாவில் பாலின பேதம் குறித்து பேசினார் " சினிமாவில் செக்சிஸம் என்பது ரொம்ப சகஜமாகிவிட்டது. நான் சூப்பர்ஸ்டாரை திருமணம் செய்து கொண்டிருக்கிறேன். இதனால் நானும் அடிக்கடி இதை எதிர்கொள்கிறேன் . நேர்காணல்களில் கூட பாலின பேதம் பார்க்கிறார்கள். சூர்யாவை திருமணம் செய்துகொண்டதற்கு நான் ரொம்ப லக்கி என்று சொன்னால். எல்லாரும் சூர்யா ஒரு நல்ல மனிதர் என்று அவரை பாராட்டுவார்கள். இதுவே என்னைப் பற்றி சூர்யா பாராட்டி பேசினால் அப்படி பேசியதற்கும் அவரைதான் பாராட்டுவார்கள். ஒரு கார் வாங்கினால் கூட அதை முதலில் இன்னொருவர் சோதித்து பார்க்க வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறார்கள். இந்த மாதிரி அன்றாட விஷயங்களில் கூட பாலின பேதங்கள் பார்க்கிறார்கள். இந்த மாதிரி நூறு விஷயங்களை என்னால் சொல்ல முடியும் ." என ஜோதிகா தெரிவித்துள்ளார்

டப்பா கார்டெல்

ஜோதிகா நடித்துள்ள டப்பா கார்டெல் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது. ஷபானா ஆஸ்மி, கஜ்ராஜ் ராவ், நிமிஷா சஜயன், ஷாலினி பாண்டே, அஞ்சலி ஆனந்த், சாய் தம்ஹங்கர், ஜிஷு சென்குப்தா, லில்லேட் துபே, பூபேந்திர சிங் ஜாதாவத் உள்ளிட்டவர்கள் இந்த சீரிஸில் நடித்துள்ளார்கள்.