ARTICLE AD BOX

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial episode update
நேற்றைய எபிசோடில் சூர்யாவிற்கு நந்தினி மாத்திரை கொடுக்க சூர்யா இவ்வளவு மாத்திரை எனக்கு வேண்டாம் என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து கல்யாணம் அந்தப் பெரிய குக்கர் மூடி எங்க இருக்குமா என்று கேட்டுக் கொண்டு வர நந்தினி அவரைக் கூப்பிட்டு மாத்திரை சாப்பிட சொன்னா சாப்பிட மாட்டேங்கிறார் அண்ணா என்று சொல்லுகிறார். உடனே சூர்யா எனக்காக ஒன்னு பண்ணுவியா கல்யாணம் என்று கேட்க என்ன வேணா பண்ணுவேன் என்று சொல்ல எனக்காக இந்த மாத்திரை முழுங்கிடு என்று சொல்லுகிறார். நீங்க என்னய்யா சின்ன புள்ள மாதிரி அடம் புடிச்சிக்கிட்டு அந்த மாத்திரையை போடணும் அவ்வளவுதானே என்று சொல்லி விட்டு, சூர்யா கையில் ஒரு கையில் மாத்திரையும் ஒரு கையில் தண்ணீரும் கொடுத்துவிட்டு கண்ணை மூட சொல்லுகிறார்.
எதற்கு என்று கேட்க சொல்றத செய்ங்க ஐயா என்று சொல்லி இந்த கைல இருக்கிறது என்ன தண்ணீர் இல்ல சரக்கு என்று கல்யாணம் சொல்ல அப்புறம் இந்த கையில இருக்கிறது என்ன மாத்திரை என்று சூர்யா சொல்ல மாத்திரை இல்ல சைடிஷ் இப்போ சைடிஷ் சாப்பிட்டு எப்படி சரக்கு அடிப்பீங்க என்று சொல்ல சூர்யா அதேபோல் மாத்திரையை போட்டுக் கொள்கிறார். பிறகு நந்தினியும் கல்யாணமும் அங்கிருந்து சென்று விடுகின்றனர். மறுபக்கம் மாதவி மற்றும் சுரேகா இருவரும் சூர்யா ரெண்டு நாளா குடிக்காம இருக்கான். இப்படியே இருந்துட்டான்னா என்ன பண்றது என்று கேட்கிறார் சுரேகா. இப்போதைக்கு இந்த பிரச்சனையை விட்டுடு அவன் இப்பதான் ஹாஸ்பிடல் உயிர் பிழைச்சு வந்து இருக்கான் என்று சொல்லுகிறார். ஆனா நீ காலையில செம போடு போட்ட அக்கா என்று நடந்த விஷயங்களை பற்றி பேசிக் கொண்டே இருக்க அந்த நேரம் பார்த்து அர்ச்சனா காரில் வந்து இறங்குகிறார்.
இருவரும் காலில் இருந்து இறங்கி வெளியே நிற்க சுந்தரவல்லி அர்ச்சனாவை உள்ளே அழைத்து வருகிறார். அர்ச்சனா வலது காலை எடுத்து வைத்து உள்ளே வர ரேணுகா அம்மா என்று கூப்பிட வர அர்ச்சனா கையை காட்டி அதட்டி விடுகிறார். உடனே மாதவி ,சுரேகா அசோகன் , அருணாச்சலம், நந்தினி என அனைவரும் அர்ச்சனாவை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். எல்லாரும் இப்ப எதுக்கு யாரோ வந்த மாதிரி ஷாக் ஆகி பாக்கறீங்க சூர்யாவுக்கு உடம்பு சரியில்லைன்னு பார்க்க வந்திருக்கா அதனால வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கேன் என்று சொல்லிவிட்டு சூர்யா மேல தான் இருக்கா நீ போய் பாரு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். உடனே அருணாச்சலம் சுந்தரவல்லி தனியாக அழைத்து செல்கிறார். மறுபக்கம் அர்ச்சனா சூர்யா மற்றும் நந்தினி இருக்கும் புகைப்படத்தை பார்த்து டென்ஷன் ஆகிறார். அருணாச்சலம் மற்றும் மாதவி இருவரும் அவளை எதுக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்க என்று கேட்கின்றனர். அவள பாத்தா சப்பு சப்புன்னு அறையனுன்னு தோணுது அவளை எதுக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சூர்யாவ பாக்க அனுப்பி இருக்கீங்க உங்களுக்கு என்ன ஆச்சு என்று சுரேகா கேட்கிறார். மாதவி இப்பவே அவளை வெளியே அனுப்புங்க இல்லன்னா அதை நானே செஞ்சிடுவேன் என்று சொல்ல சுந்தரவல்லி இப்ப என்னை என்ன சொல்ல சொல்றீங்க அவ இந்த வீட்டுக்கு வந்த கெஸ்ட் என்று நினைத்துக்கோங்க சூர்யாவை பார்க்க வந்திருக்கா பார்த்துட்டு போயிடுவா அவ என்ன இங்கே வா தங்கப் போறா என்று கேட்கிறார். அவ எதுக்கு சூர்யாவை பாக்கணும் என்று கேட்க அதற்கு அதேதான் நானும் சொல்றேன் இந்த இடத்துல வேற எந்த பொண்ணு இருந்தாலும் இப்படி நினைக்க மாட்டாங்க ஆனா இவன் நினைக்கிறா சூர்யா நல்லா ஆகணும்னு நினைக்கிறா இதுல என்ன தப்பு இருக்கு என்று சொல்லுகிறார்.
எல்லாரும் இவ்வளவு சொல்றீங்களே நான் எதுக்காக அவளை கூட்டிட்டு வந்தேன் தெரியுமா? நான் கோயிலுக்கு போனப்ப சூர்யாவுக்காக அவ யாகம் பண்ணிக்கிட்டு இருந்தா ஒரு நிமிஷம் எனக்கு பார்த்த உடனே கண்ணு கலங்கிடுச்சு ஆனா அவதான் நம்ம மேல கோவமா இருக்கணும், சூர்யா மேல கோவம் இருக்கணும் ஆனா எதுவுமே இல்ல என்று சொல்லுகிறார். மாதவி இவ்வளவு நாள் கழிச்சி அவ வீட்டுக்கு வரானா ஏதோ ஒரு திட்டம் இருக்கும் அவ ஒன்னும் அவ்ளோ நல்லது கிடையாது என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் இருக்காது எதுவாக இருந்தாலும் நான் பாத்துக்குறேன் வழி விடுங்க என்று சுந்தரவல்லி சொல்லிவிட்டு சென்று விடுகிறார். சூர்யா ரூமில் தூங்கிக் கொண்டிருக்க அர்ச்சனா சூர்யாவை ரசித்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருக்க சூர்யா அசந்து தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அவரிடம் இந்த ரூம்ல நீயும் நானும் மட்டும் தனியா இருக்கோம் என் பக்கத்துல நீ உன் பக்கத்துல நான் வேற யாரும் இல்லை இந்த ஒரு நாளுக்காக நான் எத்தனை நாள் ஏங்கி இருக்கேன் தெரியுமா. எத்தனை நாள் மனசுல நெனச்சி இருக்கேன் தெரியுமா. இந்த நாளை என்னால லைஃப் ஃபுல்லா மறக்க முடியாது என்று சொல்லுகிறார்.
இது நம்மளோட ரூம் இந்த பெட்ல உனக்கு பக்கத்துல நான் தூங்கணும் இது நமக்கான இடம் ஆனா டெய்லியும் இந்த ரூம்ல வேற ஒருத்தி தங்கும் போது எனக்கு அவ்வளவு கோபம் வருது என்று சொல்லி விட்டு, அர்ச்சனா சூர்யாவின் பக்கத்தில் உட்கார்ந்து நீ எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா, அவளுக்கு உன் பக்கத்தில் நிற்க கூட தகுதி கிடையாது. உன் மேல எனக்கு இருந்த காதல் என்ன பைத்தியமாகவே ஆக்கிடுச்சு என்று சொல்லி, சூர்யாவின் தலையை கோதி விட அவர் திரும்பி படுத்து கொள்கிறார். நீ எனக்காக பொறந்தவன் சூர்யா, கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ எல்லாமே ஒரு நாள் மாறும் என சொல்லிவிட்டு என் செல்லக்குட்டி எவ்வளவு சமத்தா தூங்குது பாரு என்று ரசித்துக்கொண்ட பார்க்கிறார். நீ வேணும்னு சுத்தி சுத்தி வரதுக்கு காரணம் உன்னோட திமிரு தான். நீ என்னை விழுந்து விழுந்து காதலச்சி இருந்தா பத்தோட பதினொன்னா விட்டுருப்ப ஆனா நீ என்ன அவாய்ட் பண்ணது தான் உன் மேல எனக்கு காதல் அதிகமாச்சு என்று சொல்லுகிறார்.
கொஞ்ச நாள் ஆகலாம் கொஞ்சம் தள்ளி போகலாம் ஆனால் என்னைக்கா இருந்தாலும் நீ எனக்கு தான். உன்ன படைக்கும் போதே ஆண்டவன் எனக்காக தான் என்று எழுதி வச்சிட்டான். இப்ப நான் உள்ள வந்த உடனே உங்க குடும்பத்துல இருக்குறவங்க எல்லாரும் நான் எதுக்காக வந்திருக்கேன்னு மண்டைய போட்டு உடைச்சுப்பாங்க எனக்கு அதெல்லாம் தேவையில்லை எனக்கு தேவை நீதான் நீ மட்டும் தான் என்று சூர்யாவையே பார்த்துக் கொண்டிருக்கிறார். உடனே கல்யாணம் நந்தினி இடம் வந்து எங்கேயாவது இது மாதிரி ஒரு அக்கப்போரு நடக்குமா என்று கேட்க நம்ப என்ன அண்ணா பண்ண முடியும் என்று கேட்கிறார். இதை வேற யாராவது கேட்டாங்கன்னா காரித்துப்புவாங்க என்று கோபப்பட்டு பேச நந்தினி நான் யாரையாவது வருத்தப்பட்டு பேசினாலே திட்டுவீங்க நீங்க எதுக்கு இப்படி பேசுறீங்க என்று கேட்க எனக்கு மனசு கேட்கலாமா உங்க ஊர்ல இது மாதிரி நடக்குமா? என்று கேட்க நடக்காது என்று நந்தினி சொல்லுகிறார். எங்குமே நடக்காது என்று கல்யாணம் திட்டிக் கொண்டிருக்க ரேணுகா அம்மா எதுக்கு வந்திருப்பாங்க அம்மா வந்தவுடனே வீடு இவ்வளவு கலவரம் ஆகுது என்று நினைக்கிறார். மீண்டும் கல்யாணம் எனக்கு அவங்க மேல விட உன் மேல தான் கோவமா இருக்கு என்று சொல்ல நான் என்ன பண்ணன என்று கேட்க நீ எதுவும் பண்ணல அதனாலதான் இந்த மாதிரி நடக்குது. இந்த இடத்துல வேறு ஒருத்தி இருந்தா அவ முடிய புடிச்சு வெளியே துரத்தி அடிச்சிருப்பா அடிக்கடி அந்த புள்ள வந்து போகும் நீ வேடிக்கை பார்த்துகிட்டு இரு என்று திட்டிக் கொண்டிருக்க சுந்தரவல்லி வருகிறார். வீட்டுக்கு கெஸ்ட் வந்து இருக்காங்களே அவங்களுக்கு என்ன வேணும் ஏது வேணும்னு கேட்டு கொடுக்க மாட்டீங்களா என்று சுந்தரவல்லி கேட்க ரேணுகா அக்கா ஏதாவது கொடுத்தீங்களா என்று சொல்ல நந்தினி இல்லை என்று தலையாட்டுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

moondru mudichu serial episode update
The post சூர்யாவை பார்க்க வந்த அர்ச்சனா, கோபப்பட்ட அருணாச்சலம், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.