ARTICLE AD BOX

Ameer: தமிழ் சினிமாவில் வித்தியாச படைப்புகளுக்கு சொந்தக்காரரானவர் இயக்குனர் அமீர். அவர் இயக்கத்தில் தளபதி விஜய் இரண்டு படங்களில் நடிக்க இருந்த நிலையில் அது மிஸ்ஸான சுவாரசிய சம்பவம்தான் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.
வீட்டின் வறுமை தாங்காமல் தன்னுடைய நண்பர் பாலாவுடன் இணைந்து சென்னைக்கு கிளம்பியவர் அமீர். இருவரும் பல கட்ட போராட்டங்களுக்குப் பின்னர் தங்களுடைய வாழ்க்கையை கோலிவுட்டில் தொடங்கினர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாலா அகிலன் என்ற படத்தை இயக்கினார்.
ஆனால் அது நடக்காமல் போனது. தொடர்ந்து அவருக்கு அமைந்ததுதான் சேது திரைப்படத்தின் வாய்ப்பு. நண்பருக்காக 9 பிரண்ட் மட்டுமே போடப்பட்ட செய்து படத்தை மதுரை கொண்டு போய் மக்களிடம் சேர்த்தவர் அமீர்தான். அதைத்தொடர்ந்து பாலாவின் நந்தா திரைப்படத்தில் பணியாற்றினாலும் பாதியிலேயே விலக நேர்ந்தது.

இதைத்தொடர்ந்து சூர்யாவை வைத்து மௌனம் பேசியதே திரைப்படத்தை இயக்கினார். அப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகள் குவிந்தது. இன்றளவும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வரும் ராம் திரைப்படத்தையும் இயக்கினார்.
அதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியின் சினிமா வாழ்க்கையை புரட்டி போட்ட பருத்திவீரன் திரைப்படத்தை இயக்கினார். இப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கூட கிடைத்தது. தொடர்ச்சியாக அமீர் டைரக்ஷன் உடன் இணைந்து நடிப்பின் மீதும் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.
இவரின் கடைசி திரைப்படமான ஆதி பகவன் படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அதிலும் திருநங்கை வேடம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் பேசப்பட்டது. அந்த கதை முதலில் சொல்லப்பட்டது தளபதி விஜய்யிடம் தானாம்.
ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் தளபதியால் நடிக்க முடியாமல் போயிருக்கிறது. இதைத்தொடர்ந்து அமீர் இயக்கத்தில் கண்ணபிரான் என்ற திரைப்படம் உருவாக இருந்தது. முதலில் அப்படத்தின் கதை நடிகர் சூர்யாவிடம் சொல்லப்பட்டு அவர் முடியாமல் போக நடிகர் விஜய்க்கு வந்திருக்கிறது.
ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை. அப்படமும் நடக்காமல் முடங்கி போனது. அதனுடன் தன்னுடைய டைரக்ஷன் பணியை மொத்தமாக முடித்துக் கொண்ட அமீர் முழுவதும் நடிப்பின் மீது ஆர்வம் காட்டி தன்னை முழு நடிகராகவே மாற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.