சூர்யா எடுத்த முடிவு, காலில் விழுந்து கெஞ்சிய மாதவி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

9 hours ago
ARTICLE AD BOX
Moondru Mudichu Serial Today Promo Update 18-03-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Today Promo Update 18-03-25Moondru Mudichu Serial Today Promo Update 18-03-25

நேற்றைய எபிசோடில் நந்தினிக்கு வெளியில் இருக்கும் இரண்டு நபர்கள் போன் பண்ணி சூர்யா சாருக்கு பார்சல் வந்திருப்பதாகவும் நீங்க வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்ல நீங்க அவர்கிட்ட கொடுக்கலாமே என்று சொல்ல அவர் போன் எடுக்கல என்று சொன்னவுடன் சரி நீங்க எங்க இருக்கீங்க என்று கேட்கிறார்.கேட்டுக்கு வெளியே தான் இருக்கோம் என்று சொல்ல நந்தினி வந்து அவர்களிடமிருந்து கிஃப்ட் பாக்ஸ் மற்றும் இந்த லெட்டர் குடுத்துடுங்க என்று சொல்ல இது யார் கொடுத்ததா சொல்றது என்று சொல்ல சூர்யா சார் அந்த லெட்டரை படிச்சாவே அவருக்கே தெரியும் என்று சொல்லிவிடுகிறார். மறுபக்கம் சூர்யா நான் கோட் பண்ண அமௌன்ட் யார் யாருக்கெல்லாம் தெரியும் என்று அலசி இந்த விஷயத்தை யார் பண்ணாங்க என்று நான் கண்டுபிடிப்பேன் என்று சவால் விடுகிறார். ஜஸ்ட் பத்து ரூபாய் அப்படி நடக்காது என்று கோபப்பட்டு பேச அந்த நேரம் பார்த்து மாதவிக்கு போன் வருகிறது.

உடனே வெளியில் கிப்ட் கொடுத்த நபர் மாதவிக்கு போன் போட்டு உங்களுக்கு போன் போகல அதனால சூர்யா சார் ஒய்ஃப் நந்தினி கிட்ட உங்க கிட்ட கொடுக்க சொன்னதா கொடுத்துட்டோம் என்று சொல்லி மாற்றி பேசுகின்றனர். உடனே மாதவி பதறிப்போய் வீட்டுக்குள்ளே ஓடி வர நந்தினி சூர்யாவிடம் கொடுத்து விடுகிறார். என்னது என்று கேட்க தெரியவில்லை என்று நந்தினி சொல்லுகிறார். இவ வேணும்னே சூர்யா கிட்ட கொடுத்து மாட்டி விட பாக்குறா என்று மாதவி நினைக்கிற உடனே சூர்யா கிப்ட் பாக்ஸ் திறந்து பார்க்க அதில் தங்க நாணயங்கள் இருக்கிறது.

அதனை குடும்பத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். உடனே அருணாச்சலம் என்னடா இதெல்லாம் என்று கேட்கிறார். உடனே சுரேகா தங்க காயின இருக்கு நீ வாங்கினியா என்று கேட்க, நந்தினியிடம் இதை யார் உன்கிட்ட கொடுத்தது என்று சூர்யா கேட்க எனக்கு தெரியல சூர்யா சார் கிட்ட குடுங்க பிசினஸ் சம்பந்தப்பட்ட விஷயம் அவரை தெரிஞ்சு பாரு என்று சொல்லி அந்த லெட்டரை படிக்க சொன்னதாக சொல்லுகிறார். உடனே மாதவி என்கிட்ட குடுக்க சொன்னத சூர்யா கிட்ட கொடுக்க சொன்னதா மாத்தி பேசுறாளே என்று மாதவி நினைக்கிறார்..

அந்த லெட்டரில் அசோகன் சார் நீங்க மட்டும் ரிஸ்க் எடுத்து இதை பண்ணலன்னா இந்த டெண்டர் எங்களுக்கு கிடைச்சிருக்காது. நீங்க கரெக்டா சொன்னதுனால தான் அதைவிட கம்மியா கோட் பண்ணி டெண்டர் எங்களுக்கு கிடைச்சது. இதுக்கு கைமாறா நீங்க கேட்ட மாதிரி 2 கிலோ கோல்ட் காயின் உங்களுக்கு அனுப்பி இருக்கோம் என சொல்லி இருக்கிறது. என்ன நடந்தது என்று அருணாச்சலம் கேட்க சூர்யா அந்த லெட்டரை காட்டுகிறார். அருணாச்சலம் லெட்டரை படிக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். உடனே டென்ஷனான சூரியா உன்ன நம்பியதற்கு என்று பேசிக்கொண்டு அசோகனை வெளுத்து வாங்குகிறார். நீ எல்லாம் மனுசனா, உன்னை எல்லாம் நான் எவ்வளவு நம்பி உன் மேல எவ்வளவு பாசம் வச்சிருந்த எங்க போனாலும் மாமா மாமான்னு உன்ன கூப்பிட்டு வச்சுட்டு போனேனே அதுக்குச் கொடுக்கிற மரியாதை என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

என்ன மாப்ள இவ்வளவு கீழ்த்தரமான வேலையை பார்த்து இருக்கீங்க என்று அருணாச்சலம் கண்டிக்க சுந்தரவல்லி எவ்வளவு நாளா இதை பண்ணிக்கிட்டு இருக்கீங்க கூட இருந்து எத்தனை நாளா குழி பறிச்சுக்கிட்டு இருக்கீங்க. அசிங்கமா இல்லையா உங்களுக்கு இன்னைக்கு நடந்தத பாத்தா இன்னைக்கு மட்டும் நடந்த மாதிரி தெரியல பல நாளா நீங்க இதை தானே பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று சுந்தரவல்லி கோபப்பட்டு திட்டுகிறார். உடனே சூர்யா இதுக்கு மேல இவங்க ரெண்டு பேரும் இங்கே இருக்க கூடாது இவங்களுக்கு செட்டில்மெண்ட் பண்ணி இந்த வீட்டை விட்டு துரத்தி விடுங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிட அருணாச்சலமும் இனிமே உங்களை இந்த வீட்ல யாரும் மதிக்க மாட்டாங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிடும் சுந்தரவள்ளியும் கோபமாக சென்று விடுகிறார். சுந்தரவல்லி பின்னாலேயே மாதவி பேச வர தயவுசெய்து இங்கிருந்து போயிடு என்று திட்டுகிறார். இது நம்ம குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய அசிங்கம் அவமானம் இவ்வளவு பெரிய துரோகம் பண்ணி இருக்கீங்க. உங்களுக்கு போய் சப்போர்ட் பண்ண பாரு என்று சொல்லி கோபப்பட மாதவி அப்படி எல்லாம் பேசாதீங்க அம்மா. உண்மை என்னன்னு தெரிஞ்சுக்கோங்க என்று சொல்ல, இனிமே என்ன உண்மை தெரிஞ்சுக்கணும் என்று சொல்லிவிட்டு இந்த வீட்ல உனக்கும் உன் புருஷனுக்கும் கொடுக்க வேண்டிய எல்லா உரிமையும் கொடுத்து தானே இருக்கேன் அவங்க முன்னாடி நான் கூனி குறுகி நின்னேன் என்று சுந்தரவல்லி சொல்ல, இது ஒன்னு மட்டும் கேளுங்க அம்மா நான் எந்த தப்பும் பண்ணலன்னு சொல்லல இதுக்கும் என் புருஷனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, உங்களுக்காக தான் இதை பண்ண சூர்யா உங்களை அசிங்கப்படுத்திக்கிட்டே இருக்கா உங்கள ஜெயிக்க வைக்கிறதுக்காக தான் இப்படி பண்ணேன் எனக்கு வேற வழி தெரியல. இந்த பிசினஸ் விஷயத்துல அவ ஜெயிச்சுட்டான்னா உங்கள என்ன வேணாலும் பேசுவா அதனாலதான் எங்க மேல பழி விழுந்தாலும் பரவாயில்லை என்று இதை செய்தோம் என்று சொல்லுகிறார்.

சுந்தரவல்லி நிஜமாதான் சொல்றியா என்று கேட்க, நான் என்னைக்காவது இது மாதிரி பண்ணி இருக்கேனா நான் நீங்க பெத்த பொண்ணு என்று அழுது நாடகம் ஆடுகிறார். முழுக்க முழுக்க இது நீங்க ஜெயிக்கிறதுக்காக பண்ண விஷயம். நீங்க தல நிமிர்ந்து நிக்கணும். என் புருஷன் பெயரை கவரில் எழுதினதுனால அவர் கெட்டவர் ஆயிட்டாரு எங்கள மன்னிச்சுடுங்க அம்மா என்று சொல்ல நான் கூட உன்னை தப்பா நினைச்சுட்டேன் என்று சுந்தரவல்லி சமாதானப்படுத்துகிறார்.

பிறகு மாதவியிடம் மாப்பிள்ளையே எல்லாரும் தப்பா பேசிட்டாங்க அவரை எதுவும் மனசுல வச்சுக்க வேண்டாம்னு சொல்லு என்று சொல்ல நான் அவர்கிட்ட பேசிக்கிறமா நீங்க மன்னிச்சிட்டீங்களா அதுவே போதும் என்று சொல்லுகிறார். அர்ச்சனா ரேனுகாவிற்கு ஃபோன் போட்டு என்ன வீடு ரணகளமா இருக்கா என்று கேட்க இங்கே எல்லாரும் அடிச்சுக்கிட்டு இருக்காங்க, நீங்க கொடுத்த தங்க காசு இங்க நல்லா வேலை செஞ்சுகிட்டு இருக்கு. நந்தினி தான் இதை செஞ்சதா மாதவி நந்தினி மேல கோவமா இருக்காங்க. ஆனா மாதவி சுந்தரவல்லி கிட்ட ஏதோ ரூமுக்குள்ள போய் பேசினாங்க அதுக்கப்புறம் சந்தோஷமா தான் இருக்காங்க என்று சொல்ல, நம்மளோட நோக்கம் மாதவிக்கு நந்தினி மேல கோபம் இருக்கணும் அதுதான் நம்மளுக்கு வேணும். அந்த கோபம் வண்ணமா மாறனும். அதுக்காக என்ன பண்ணனும் அதை நான் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ என்று சொல்லி ரேணுகாவிடம் அர்ச்சனா ரகசியம் சொல்ல சூப்பர்மா நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிடுறேன் என்று போனை வைக்கிறார்.

அருணாச்சலம் சுந்தரவல்லி இடம் பேச வேண்டும் என்று கூப்பிட எனக்கு கொஞ்சம் வெளியே போகணும் என்று சொல்லிவிட்டு பிரண்டு வீட்டுக்கு போவதாக சொல்லி செல்கிறார். மறுபக்கம் சூர்யா டென்ஷனாக யோசித்துக் கொண்டிருக்க, கல்யாணம் பக்கத்தில் கார்டனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க நானும் உங்க கூட ஹெல்ப் பண்றேன் என ரேணுகா வேலை செய்ய வருகிறார்.உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யாமல் இருக்கணும் என்று சொல்ல உடனே சூர்யாவிற்கு காதில் படுமாறு என்னதான் நம்ம முதலாளி ஐயா வீடா இருந்தாலும் அவங்க இது மாதிரி பண்ணி இருக்க கூடாது என்று சூர்யாவை ஏத்தி விடும் படி பேசுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா கோபத்தில் இருக்கும்போது அதை சரி பண்ண நீ என்ன பண்ணாலும் அது இன்னும் கோவத்துல தான் போய் முடியும் என்று சுரேகா மாதவியிடம் சொல்லுகிறார். மறுபக்கம் மீண்டும் அசோகன் மீது சூர்யா கோபத்தை காட்ட என்ன இருந்தாலும் அவர் உன்னோட அக்கா வீட்டுக்காரர் என்று சொல்ல அதற்கு சூர்யா அந்த ஒரு காரணத்துக்காக தான் இன்னும் போலீஸ் கிட்ட போகாம இருக்கேன் என்று சொல்லுகிறார்.

அவங்க இங்கேயே இருக்கட்டும் நான் போறேன் என்று சொல்லிவிட்டு நந்தினியை வா என்று சொல்லிவிட்டு சூர்யா வெளியில் போக மாதவி சூர்யாவின் காலில் விழுந்து கெஞ்சுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Promo Update 18-03-25Moondru Mudichu Serial Today Promo Update 18-03-25

The post சூர்யா எடுத்த முடிவு, காலில் விழுந்து கெஞ்சிய மாதவி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article