சூப்பர் சுவையில் வெண்டைக்காய் மோர்க்குழம்பு - தேங்காய் பால்கறி... சட்டுபுட்டுனு செய்யலாமா?

3 hours ago
ARTICLE AD BOX

ன்றைக்கு சுவையான வெண்டைக்காய் மோர்க்குழம்பு மற்றும் தேங்காய் பால்கறி ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

வெண்டைக்காய் மோர்க்குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

எண்ணெய்-தேவையான அளவு.

வெண்டைக்காய்-1 கப்.

கடுகு-1/2 தேக்கரண்டி.

சீரகம்-1/2 தேக்கரண்டி.

உளுந்து-1/2 தேக்கரண்டி.

கருவேப்பிலை-சிறிதளவு.

காய்ந்த மிளகாய்-4

மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.

பெருங்காயத்தூள்-1/2 தேக்கரண்டி.

கொத்தமல்லி-சிறிதளவு.

உப்பு-1 தேக்கரண்டி.

தயிர்-200 ml.

அரைத்து கொள்ள:

துருவிய தேங்காய்- 1 கப்.

சீரகம்-1 தேக்கரண்டி.

இஞ்சி-1 துண்டு.

பச்சை மிளகாய்-4

ஊற வைத்த அரிசி-1 தேக்கரண்டி.

ஊற வைத்த துவரம் பருப்பு-1 தேக்கரண்டி.

வெண்டைக்காய் மோர்க்குழம்பு செய்முறை விளக்கம்.

முதலில் மிக்ஸியில் துருவிய தேங்காய் 1 கப், 1 தேக்கரண்டி சீரகம், இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 4, ஊற வைத்த துவரம் பருப்பு 1 தேக்கரண்டி, ஊற வைத்த அரிசி 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது கடாயில் 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய் 1 கப்பை சேர்த்து  2 சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
அல்டிமேட் சுவையில் பாஸ்தா பால் கொழுக்கட்டை - முட்டை பனீர் இட்லி ரெசிபிஸ்!
Ladies finger buttermilk gravy-coconut milk curry

இப்போது அதே கடாயில் 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு  ½ தேக்கரண்டி கடுகு, ½ தேக்கரண்டி சீரகம், ½ தேக்கரண்டி உளுந்து, காய்ந்த மிளகாய் 4, கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். இப்போது இதில் ½ தேக்கரண்டி மஞ்சள் தூள், 1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்துவிட்டு அரைத்த விழுதை இதில் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் வதக்கிய வெண்டைக்காயையும் 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து வேக விடவும்.

இப்போது அடித்து வைத்திருக்கும் 200ml தயிரை சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து இறக்கினால் சுவையான வெண்டைக்காய் மோர்க்குழம்பு தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

தேங்காய் பால்கறி செய்ய தேவையான பொருட்கள்.

கேரட்-1 கப்.

காலிஃபிளவர்-1 கப்.

பட்டாணி-1 கப்.

பீன்ஸ்-1 கப்.

கடுகு-1/2 தேக்கரண்டி.

சீரகம்-1/2 தேக்கரண்டி.

பச்சை மிளகாய்-2

காய்ந்த மிளகாய்-2

கருவேப்பிலை-சிறிதளவு.

இஞ்சி பூண்டு-சிறிதளவு.

எழுமிச்சைப்பழ சாறு-1/2 மூடி.

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

உப்பு-1 தேக்கரண்டி.

மூன்றாவதாக எடுத்த தேங்காய் பால்-250 ml.

முதல் தேங்காய் பால்-1 கப்.

கொத்தமல்லி- சிறிதளவு.

தேங்காய் எண்ணெய்-1 குழிக்கரண்டி.

இதையும் படியுங்கள்:
வேற லெவல் டேஸ்டில் மரவள்ளிக்கிழங்கு தோசை -தட்டப்பயிறு குழம்பு ரெசிபிஸ்!
Ladies finger buttermilk gravy-coconut milk curry

தேங்காய் பால்கறி செய்முறை விளக்கம்.

முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் நறுக்கிய கேரட் 1 கப், பீன்ஸ் 1 கப், காலிஃபிளவர் 1 கப், பட்டாணி 1 கப் சேர்த்து 5 நிமிடம் நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது கடாயில் 1 குழிக்கரண்டி  தேங்காய் எண்ணெய் விட்டு ½ தேக்கரண்டி கடுகு, ½ தேக்கரண்டி சீரகம், 2 சிட்டிகை வெந்தயம், 2 காய்ந்த மிளகாய் 2, பச்சை மிளகாய் 2, கருவேப்பிலை சிறிதளவு, இஞ்சி பூண்டு சிறிதளவு, நறுக்கிய வெங்காயம் 1 சேர்த்து வதக்கியதும் வேக வைத்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும்.

இப்போது இத்துடன் ½ தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து கிளறவும். கடைசியாக பாதி எழுமிச்சைப்பழ சாறை சேர்த்துக் கொள்ளவும்.

இப்போது இதில் மூன்றாவதாக எடுத்த 250 ml தேங்காய் பாலை சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும். பிறகு முதலில் எடுத்த தேங்காய் பால் 1 கப்பை சேர்த்து 1 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து இறக்கினால், சுவையான தேங்காய் பால்கறி தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

Read Entire Article