60+ வயதா? இந்த 5 நிறங்களை தவிர்த்துவிடுங்கள் மகளிரே!

3 hours ago
ARTICLE AD BOX

ளமையில் மற்றும் நடுத்தர வயதில் விரும்பி அணிந்த வண்ணங்கள் 60 வயதுக்கு மேல் பொருத்தமாக இருக்காது. இந்தப் பதிவில் 60+ பெண்கள், எந்த நிறங்களில் ஆடை அணியக்கூடாது, அதற்கு மாற்றாக எந்த நிறத்தில் உடையணிந்தால் அழகாக இருக்கும் என்பது பற்றி பார்ப்போம்.

1. பனிக்கட்டி வெள்ளை நிறம்: (Icy white)

இது மிகவும் பிரகாசமான மற்றும் துடிப்பான நிறம் ஆகும். வயதாகும் போது சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள், சுருக்கங்களுடன் சேர்ந்து, இந்தத் தூய வெள்ளை நிற ஆடைகள் மந்தமான தோற்றத்தைத் தரும். நல்ல சிவப்பாக இருக்கும் பெண்கள் கூட பனிக்கட்டி வெள்ளை நிற ஆடை அணியும்போது அவர்களது இயற்கையான பிரகாசத்தை இழந்து டல்லாக தோற்றமளிப்பார்கள். அவர்களின் முதுமைத் தோற்றத்திற்கு சற்றும் பொருந்தாத வகையில் இருக்கும்.

மாற்று நிறங்கள்:

கிரீமி வெள்ளை; இது அறுபது வயதுக்கு மேற்பட்ட பெண்களின் வயதான மென்மையான சருமத்துடன் நன்றாக மேட்ச் ஆகி அழகான தோற்றத்தை தரும்.

சாஃப்ட் ஐவரி எனப்படும் தந்த நிறம்:

இந்த நிறத்தில் புடவை அல்லது சுடிதார் அணிந்து கொள்ளும் போது இது சிவப்பு, கருமை மற்றும் மாநிறம் போன்ற பல்வேறு நிறத்தில் உள்ள பெண்களுக்கு எடுப்பாகவும், நேர்த்தியாகவும் இருக்கும்.

முத்து வெள்ளை நிறமும் சருமத்தை பிரகாசமாகவும் மென்மையாகவும் தோன்ற செய்யும்.

2. மங்கலான பழுப்பு நிறம் (faded beige)

பழுப்பு நிறம் நேர்த்தியான நிறமாக இருந்தாலும் அது 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மந்தமான டல்லான தோற்றத்தையும், ஒரு பழமைவாத நிறமாகவும் அவர்களை மேலும் வயதானவர்களாகவும் காட்டும்.

மாற்று நிறங்கள்: ஒட்டக நிறம், மணல் நிறம்... ஒட்டக நிறத்தில் இருக்கும் ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியலாம். ஏனென்றால் மங்கலான பழுப்பு நிறத்திற்கு சிறந்த மாற்றாக இருக்கும். இது மிகவும் பிரகாசமாக இல்லாமல், நவீன தோற்றத்தை உருவாக்குகிறது. அனைத்து வகையான சரும வகைகளுக்கும் ஏற்றது.

மணல் கலர்: இது ஒட்டக நிறத்தை விட சற்றே இலகுவான, ஆனால் நிறத்தை பளிச்சென்று எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. நேவி ப்ளூ, ஆலிவ் பச்சை, கருப்பு நிற காம்பினேஷனில் அட்டகாசமாக இருக்கும்.

3. பேபி பிங்க்:

பேபி பிங்க் எனப்படும் இளம் பிங்க் நிறம் இளமையான சருமத்திற்கு மிகவும் ஏற்றது. வயதான பெண்களை இன்னும் முதுமையாக, பொலிவற்ற தோற்றத்தை தரும்.

மாற்று நிறங்கள்:

அழுத்தமான பிங்க்: இந்த நிறத்தில் உடை அணியும்போது முதிய பெண்கள் கூட இளமையாக தோற்றமளிப்பார்கள். சருமத்தில் பிரகாசத்தை சேர்த்து, நேர்த்தியான தோற்றத்தை உருவாக்குகிறது.

ரோஸி பிங்க்: இது அடர்த்தியான இளஞ்சிவப்பு நிறத்தை விட மென்மையாக இருக்கும். ஆனால் பேபி பிங்க்கை விட சற்றே டார்க் ஆக இருக்கும். இதை அணியும் வயதான பெண்மணிகளுக்கு நல்ல மரியாதையான தோற்றத்தை தருகிறது. ஷிஃபான், க்ரேப் போன்ற மெட்டீரியலில் ஆன ரோஸி பிங்க் புடைவைகள் கம்பீரமான லுக் தரும்.

இதையும் படியுங்கள்:
கல்லூரி மாணவிகள் தெரிந்துகொள்ள வேண்டிய சிம்பிளான பியூட்டி டிப்ஸ்..!
Looks beautiful in any color dress womens

4. மந்தமான கருப்பு நிறம் (Matte black):

பளபளப்பு இல்லாத மந்தமான கருப்பு நிறம் இளம் வயதினருக்கு மிகவும் பொருத்தமாக, நேர்த்தியான அதிநவீன தோற்றத்தை உருவாக்குகிறது. ஆனால் வயதாகும் போது இதே நிறம் அவர்களை மிகவும் டல்லாக மந்தமாக பொலிவற்றுக் காட்டுகிறது.

மாற்று நிறங்கள்:

சார்க்கோல் கிரே எனப்படும் கரி சாம்பல் நிறம் மந்தமான கருப்பு நிறத்திற்கு சரியான மாற்றாக இருக்கும். நேவி ப்ளூ பிளவுஸ் உடன் கூடிய சார்கோல் கிரே புடவை, நேவி ப்ளூ பான்ட் உடன் கூடிய சார்கோல் கிரே டாப் நன்றாக இருக்கும். இதனுடன் மேட்சாக தங்க நகைகள் அணிவது சிறப்பான ரிச் லுக் தரும்.

மேட் கருப்புக்கு மாற்றாக நேவி ப்ளூ மிகவும் பொருத்தமாக இருக்கும். இதனுடன் சிவப்பு, காக்கி அல்லது பச்சை போன்ற பிற வண்ணங்களை சேர்ப்பதன் மூலம் நேர்த்தியான ஒரு தோற்றத்தை உருவாக்க முடியும். வயதான பெண்களுக்கு சிறந்த தேர்வாக அமையும். இதனுடன் பவளம், தங்க நகைகள் பொருத்தமாக இருக்கும்.

5. வெளிர் மஞ்சள் நிறம்:

இந்த அழகான நிறம் வயதான பெண்களை டல்லாக்கும்.

மாற்று நிறங்கள்:

மஸ்டர்டு எனப்படும் வெந்தயக் கலர், அம்பர் மஞ்சள் மஸ்டர்டு அழுத்தமான நிறத்தில், மஞ்சளுக்கும் ஆரஞ்சுக்கும் இடைப்பட்ட நிறத்தில் இருக்கும். ஆலிவ் பச்சை மற்றும் ஒட்டக மஞ்சள் போன்ற நிறத்துடன் இணைக்கும்போது நன்றாக இருக்கும். இது எல்லா வகை சரும்த்தினருக்கும் பொருந்தும். நேவி ப்ளூ பேண்ட், ஒயிட் ஜீன்ஸ் உடன் ஆழமான வெந்தய கலர் அல்லது அம்பர் மஞ்சள் நிற டாப்புடன் இணைத்துக் கொள்ள வேண்டும். இதே காம்பினேஷனில் ரவிக்கை, புடைவையுடன் தங்க ஆபரணங்கள் அணிந்து கொண்டால் நன்றாக இருக்கும் இளமையான தோற்றத்தை தரும்.

Read Entire Article