சூடான சாதத்திற்கு கிராமத்து பாணியில் புளிக்குழம்பு: இந்த முறையில் செய்ங்க

2 days ago
ARTICLE AD BOX

நமது வீட்டில் அம்மா மற்றும் பாட்டிக்கள் செய்யும் குழம்பே சுவையானதாக இருக்கும். ஆனால் இன்றைய கால தலைமுறை ஆட்களுக்கு சுவையான குழம்பு வைக்கத் தெரிவதில்லை.

கிராமத்து குழம்புகளில் சுவையான ஒரு குழம்பு தான் புளி குழம்பு. இதனை வீட்டிலேயே எளிமையாக செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம். கிராமத்து பகுதிகளில் செய்யப்படும் அனைத்து விதமான உணவுகளும் மிகவும் சுவையாக இருக்கும்.

ஏனெனில் அதில் சேர்க்கப்படும் மசாலா மற்றும் அது செய்யக்கூடிய பதம் என தனித்துவமான முறையில் செய்யப்படுகின்றன . குறிப்பாக நமது வீட்டில் அம்மா மற்றும் பாட்டிக்கள் செய்யும் குழம்பு வகைகளுக்கு பொரியல் வைக்க வேண்டிய அவசியமில்லை.

அந்த அளவிற்கு குழம்பே சுவையானதாக இருக்கும். ஆனால் இன்றைய கால தலைமுறை ஆட்களுக்கு சுவையான குழம்பு வைக்கத் தெரிவதில்லை.

 தேவையான பொருட்கள்

  • பெரிய நெல்லிக்காய் அளவு உள்ள புளி
  • 4 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  • அரை டீஸ்பூன் கடுகு
  • அரை டீஸ்பூன் பெருங்காயம்
  • 3 வற மிளகாய்
  • 1 டீஸ்பூன் வெந்தயம்
  • 2 பெரிய வெங்காயம்
  • 10 பல் பூண்டு
  • 2 தக்காளி அரை டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
  • மிளகாய் தூள்
  • தேவையான அளவு உப்பு
  • 2 கொத்து கறிவேப்பிலை

செய்முறை

புளி குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு நெல்லிக்காய் அளவு உள்ள புளியை தண்ணீர் மூழ்கும்படி ஒரு பாத்திரத்தில் ஊற வைக்க வேண்டும். புளியை கரைக்கும் போது நன்றாக கெட்டியாக இருக்கும் அளவு மட்டுமே தண்ணீர் ஊற்ற வேண்டும்.

பின்னர் புளி ஊறியவுடன் கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது வெள்ளைப் பூண்டை தோல் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். நல்லெண்ணெய் சூடானதும் மிதமான தீயில் கடுகு, பெருங்காயம், வற மிளகாய், வெந்தயம், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய பூண்டு இவை அனைத்தையும் ஒன்றாக போட்டு நன்கு வதக்க வேண்டும்.

இவை ஓரளவிற்கு வதங்கி பூண்டின் பச்சை வாசனை போனதும் பின்னர் இதில் பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெய் மிதந்து வரும் வரை வதக்க வேண்டும்.

சில நிமிடங்களுக்கு பின்னர் இதில் நாம் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்ற வேண்டும். பின்னர் சிறிதளவு மிளகாய் தூள் சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கி விட வேண்டும்.

இறுதியாக ஒரு கைப்பிடி அளவுள்ள கறிவேப்பிலையை தூவி அடுப்பை அணைக்க வேண்டும். சூடான சுவையான புளிக்குழம்பு தயார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW           



Read Entire Article