சூடா கொழகொழன்னு இருக்கணும்... நடிகர் விக்ரம் சொல்லும் தயிர் சாதம் டிப்ஸ்!

5 hours ago
ARTICLE AD BOX

நடிகர் விக்ரம் தான் எப்படி தயிர் சாதம் செய்வேன் என்பதை, சாதம் சூடா கொழகொழன்னு இருக்கணும் என்று கேட்கும்போதே சாப்பிடத் தூண்டும் வகையில் ஒரு சூப்பரான தயிர் சாதம் டிப்ஸ் கூறியிருக்கிறார்.

Advertisment

ரொம்ப எளிதாகவும் சுவையாகவும் ஒரு உணவு செய்ய முடியும் என்றால் அது தயிர்சாதம்தான். அந்த தயிர்சாதம் சுவையாகவும் விரும்பி சாபிடும்படியாகவும் இருக்க வேண்டும் என்றால் அதை செய்யும் முறையில்தான் இருக்கிறது. இதைத்தான் நடிகர் விக்ரம், அவர் எப்படி தயிர்சாதம் செய்வார் என்பதைக் கூறியுள்ளார்.

ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் மற்றும் அவருடைய மகன் துருவ் இருவரும் மேடையில் பேசுகின்றனர். இந்த நழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சியில் பேசும் நடிகர் விக்ரம்,  “மாலையில் சாப்பாடு நல்லா ஒரு வெட்டு வெட்டுவேன். எனது மகன் துருவ் விக்ரம் என்ன மாதிரியே ஒரு உணவு பிரியர்.” என்று கூறுகிறார்.

Advertisment
Advertisement

அப்போது, அர்ச்சனா நடிகர் துருவ்விடம், “அம்மா சமைப்பதில் என்ன பிடிக்கும்” என்று கேட்கிறார். அதற்கு துருவ், “பருப்பு சாதம், சாம்பார் சாதம்” என்று பதிலளிக்கிறார்.

அப்போது குறுக்கிடும் விக்ரம், “அவர்கள் என்ன சமைக்கிறார்கள் என்று நான் பண்ணி காட்டினேன். நான் பண்ணும் ஒரு தயிர் சாதம் வெரைட்டி ரொம்ப நல்லா இருக்கும் என்று கூறுகிறார். 

இதற்கு நிகழ்ச்சித் தொகுப்பாளர் அர்ச்சனா, 
“தயிர் சாதத்தில் என்ன சார் வெரைட்டி” என்று கேட்கிறார். அதற்கு நடிகர் விக்ரம், “சாதம் சூடா நல்லா கொழகொழன்னு குழைந்து இருந்தால் நல்லா இருக்கும். நல்லா சூடாக எடுத்து அதில் பால் நன்றாக செட் ஆகி இருக்கக்கூடாது. தயிர்சாதம் பண்ணிவிட்டு லைட்டாக பால் ஊற்றினால் நல்லா இருக்கும். இந்த தயிர் சாதத்தை கொஞ்சம் வெதுவெதுப்பாக வைத்து, ஊறுகாய், உருளைக்கிழங்கு வறுவல் சாப்பிட வேண்டும். நன்றாக இருக்கும்.” என்று கூறுகிறார்.

விக்ரம் சொல்லும் இந்த ஸ்டைலில் உங்கள் வீட்டில் தயிர் சாதம் செய்து பாருங்கள். எப்படி இருக்கிறது என்று சாப்பிட்டுப் பாருங்கள். தயிர்சாதத்தின் சுவை, அதை செய்யும் முறையிலும் அதனுடன் தொட்டுகொள்ள வைக்கும் ஊறுகாய், சைட் டிஷ்ஷிலும்தான் இருக்கிறது.

Read Entire Article