சுவையான தேங்காய் போளி செய்வது எப்படி?.. முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!

10 hours ago
ARTICLE AD BOX

தேங்காய் போளி செய்வது எப்படி….

 

தேவையானவை:

 

மேல் மாவுக்கு: மைதா 200 கிராம், உப்பு, மஞ்சள்தூள் – தலா ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய் – 100 கிராம்.

பூரணத்துக்கு: நைஸாக துருவிய கொப்பரை – 250 கிராம், சீவிய முந்திரி – 50 கிராம், பொடி செய்த பாகு வெல்லம் – 300 கிராம், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்தூள் – சிறிதளவு, நெய், எண்ணெய் சேர்த்து – 100 கிராம்.

 

செய்முறை:

 

மைதா, உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு பரோட்டா மாவு மாதிரி பிசைந்து, 100 கிராம் நல்லெண்ணெயை மேலே விட்டு 2 மணி நேரம் ஊறவிடவும். இதுதான் மேல் மாவு.

 

வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரையவிட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து, துருவிய கொப்பரை, சீவிய முந்திரி சேர்த்து பூரணமாக கிளறி இறக்கவும். ஆறிய பின் ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்தூள் சேர்த்து சிறிய ஆரஞ்சு அளவு எடுத்து உருட்டவும். மேல் மாவு சிறிதளவு எடுத்து விரித்து, அதனுள் பூரணம் நிரப்பி மூடி, வாழையிலையில் வைத்து கையால் தட்டி, சூடான தவாவில் போட்டு நெய் – எண்ணெய் கலவை விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

Read Entire Article