சுவையாக சமைத்து சமையலில் அசத்தலாம் வாங்க...

11 hours ago
ARTICLE AD BOX

மைப்பதற்காக வாங்கி வந்த வாழைக்காய் பழுத்து விட்டதா? அதை குக்கரில் வேகவிட்டு தோல் உரித்து மசித்துக்கொள்ளுங்கள். பக்கோடாவுக்கான பிற பொருட்களுடன் சேர்த்து சுவையான பக்கோடாக்கள் தயாரிக்கலாம்.

கேரட், பீட்ரூட், மாங்காய் போன்ற காய்களை எளிதில் துருவ காய்களின் தோலைச் சீவியதும், தண்ணீரில் கழுவி துணியால் நன்றாகத் துடைத்துவிட்டு பிறகு துருவுங்கள். கையிலிருந்து வழுக்காமல் இருக்கும். கொழகொழப்பில்லாமல் சுலபமாக துருவ முடியும்.

தயிர் வடை செய்யும்போது, வடைகளை வெந்நீரில் முக்கி எடுக்காமல், சூடான பாலில் தோய்த்து எடுத்து தயிரில் ஊறவையுங்கள். வடை ருசி மாறாமல், புளிப்பு வாடை வராமல் நீண்ட நேரம் நன்றாக இருக்கும்.

பொரித்த ஒரு அப்பளத்தை நொறுக்கி, இரண்டு டீஸ்பூன் துருவிய தேங்காய், கறிவேப்பிலை, புளி, ஒன்றிரண்டு மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரையுங்கள். சுவையான அப்பளத் துவையல் தயார்.

அடை மற்றும் வடை மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால், ஒன்றிரண்டு டீஸ்பூன் கார்ன்ஃ ப்ளேக்ஸை பொடித்துச் சேர்த்தால் போதும். உடனடியாக ஊறி மாவு கெட்டியாவதுடன் சுவையும் அபாரமாக இருக்கும்.

சப்பாத்தி, போளி போன்றவற்றுக்கெல்லாம் மாவு பிசையும் போது, தண்ணீர் மற்றும் பால் சேர்க்காமல் மில்க்மெய்டு விட்டுப் பிசைந்து தயாரித்தால் சுவையாக இருக்கும்.

தினமும் சமைக்கும் முன் ஃப்ரிட்ஜில் உள்ள எல்லா காய்களையும் வெளியே எடுத்து வையுங்கள். தேவையானதை எடுத்துக்கொண்டு மீதமுள்ளவற்றை மேஜையின் மீது உலர வைத்து விடுங்கள். அரை மணி நேரம் கழித்து அந்தக் காய்களை மீண்டும் ஃப்ரிட்ஜில் எடுத்து வையுங்கள். இதனால் காய்கள் அழுகாமல் நாள்பட இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வித்தியாசமாக செய்து அசத்த இரண்டு வடகங்கள்!
You can cook deliciously

தோசை மாவு அரைக்கும்போது, தோல் நீக்கிய மூன்று, நான்கு உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி, மாவுடன் சேர்த்து அரைத்து தோசை வார்த்தால் தோசை ரொம்ப டேஸ்ட்டாக இருக்கும்.

தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சியை பச்சை மிளகாயுடன் சிறிது எண்ணையில் வதக்கி, உப்புடன் மிக்ஸியில் அரைத்து,

தாளித்த சாதத்துடன் கலந்துவிட்டால் சுவையான இஞ்சிச் சாதம் ரெடி.

இட்லிமாவில் சிறிது சோளமாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கரைக்கவும். காலிஃப்ளவர் துண்டுகளை கரைத்த மாவில் முக்கி எடுத்து எண்ணையில் பொரித்தால் சுவையான கோபி மஞ்சூரியன் தயார்.

உப்புமா, வெண்பொங்கல் போன்றவை சமைத்த நேரத்திலேயே கெட்டியாகிவிடும். அரைக்கரண்டி சூடான பாலை அதில் ஊற்றிக்கிளறிவிட்டால் நன்கு இளகிவிடும். சுவையும் மாறாது.

சூடான எண்ணெயை ஊற்றி மாவு பிசைந்தால் ரிப்பன் பக்கோடா மொறு மொறுப்பாக வரும்.

Read Entire Article