சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு கொண்டு வாருங்கள் – எலன் மஸ்க்கிடம் வேண்டுகோள் விடுத்த ட்ரம்ப்!

3 days ago
ARTICLE AD BOX

விண்வெளி ஆய்வு மையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸை எப்படியாவது திரும்பி பூமிக்கு கொண்டு வர வேண்டும் என்று ட்ரம்ப் எலன் மஸ்க்கிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

எலோன் மஸ்க் மற்றும் ட்ரம்பின் உறவு குறித்து உலக மக்கள் அனைவருக்குமே தெரியும். நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பிற்கு மிகவும் உதவியாகவும் ஆதரவாகவும் இருந்தவர் எலன் மஸ்க். இதனால், மேலும் இருவரும் நெருக்கமானார்கள். ஆகையால், எலன் மஸ்க் மற்றும் ட்ரம்ப் இணைந்து பணியாற்றியும் வருகின்றனர்.

முன்னாள் அதிபர் ஜோ பைடன், அமெரிக்கா சில பணக்காரர்கள் கையில் சிக்கி தவிக்க வாய்ப்புள்ளதாக மறைமுகமாக எலோன் மஸ்க்கை சாடினார்.

இப்படியான நிலையில், ஜோ பைடன் அரசில் இரண்டு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் நீண்ட காலமாக சிக்கி தவித்து வருவது கொடூரமானது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
மனித உடலுக்கு புரோட்டீன் சத்து ஏன் அவசியம்?
Donald trump and Musk

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்த எலோன் மஸ்க், “விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கித் தவிக்கும் இரண்டு விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வர வேண்டும் என்று டொனால்டு டிரம்ப் ஸ்பேஸ் எக்ஸ்-ஐ கேட்டுள்ளார். நாங்கள் அவ்வாறு செய்வோம். பைடன் இவர்களை நீண்ட காலம் தவிக்க செய்தது கொடூரமானது," என்று குறிப்பிட்டார்.

எலோன் மஸ்க்கிற்கு போட்டியாக வந்த போயின் நிறுவனம், மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப 'ஸ்டார்லைனர்' எனும் விண்கலத்தை ரெடி செய்திருந்தது. அதில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த புட்ச் வில்மோர் ஆகியோர் பூமியிலிருந்து 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றிருந்தனர்.

இதையும் படியுங்கள்:
சுவையான‌ ராகி லட்டு - கேரட் அல்வா இப்படியும் செய்யலாமே!
Donald trump and Musk

அங்கு ஆய்வை முடித்த பிறகு 10 நாட்களில் திரும்ப வேண்டும் என்பதுதான் ப்ளான். ஆனால், சென்ற ஆண்டு ஜூன் மாதம் சென்றவர்கள் இன்னும் திரும்பவில்லை. ராக்கெட்டில் மிகப்பெரிய பிரச்சனைகள் இருப்பது தெரியவந்தது. அந்த பிரச்சனையை சரி செய்ய இருவரும் இதுவரை முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், முடியவில்லை. ஆட்கள் இல்லாமல் வெறும் ஸ்டார்லைனர் மட்டும் பூமிக்கு திரும்பியது. இதனால் இரண்டு விண்வெளி வீரர்களும் விண்வெளியிலேயே சிக்கிக்கொண்டனர். இன்னும் அவர்கள் எப்போது வருவார்கள் என்பதே தெரியாமல் இருக்கிறது.

Read Entire Article