சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, சூர்யா கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

2 hours ago
ARTICLE AD BOX
moondru mudichu serial today episode update 31-01-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது

moondru mudichu serial today episode update 31-01-25
moondru mudichu serial today episode update 31-01-25

நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினியை இழுத்துக்கொண்டு வந்து மேடையில் நிற்க வைத்து எல்லோருக்கும் இதுதான் என்னோட பியூட்டிஃபுல் வைப் இவங்களுக்கு தான் இன்னைக்கு பிறந்த நாள் என்று சொல்லி அனைவரையும் கைதட்ட சொல்லுகிறார். இதையெல்லாம் பார்த்து சுந்தரவல்லி டென்ஷனாக, சூர்யா பூ கொடுத்து நந்தினிக்கு விஷ் பண்ணுகிறார். உடனே கேக் எடுத்துக் கொண்டு வர சொல்லி கேக்கை பிரித்து டேபிள் மீது வைக்க அசோகன் மற்றும் மாதவி சுரேகாவை மேலே கூப்பிடுகிறார். பிறகு எல்லோரும் கிட்ட வாங்க என்று கூப்பிட சுந்தரவல்லி அங்கிருந்து கிளம்பி தூரம் சென்று பார்க்க,பிறகு சூர்யா மெழுகுவர்த்தி ஏற்றி நந்தினியை கேக் கட் பண்ண சொல்லுகிறார்.

நந்தினியும் கேண்டில் ஊதி கேக் கட் பண்ண அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து பாடுகின்றனர். கேக் எடுத்து நந்தினி சூர்யாவிற்கு ஊட்டு விட சூரியா நந்தினிக்கு ஊட்டி விடுகிறார். இந்தப் பிறந்தநாள உன்னால மட்டும் இல்ல வேற யாராலும் மறக்க முடியாது என்று சொல்லி சந்தோஷப்படுகிறார். விஜி அண்ணே உங்களோட கிப்ட் என்று கொடுக்க முதல்ல நீங்க கொடுங்க என்று சொல்ல விஜி கொடுத்த பிறகு சூர்யா அவருடைய பிறந்தநாள் பரிசை நந்தினிக்கு கிப்ட் கொடுத்து அதை பிரித்து பார்க்க சொல்லுகிறார்.அதில் கிரீடம் இருக்க அந்த கிரீடத்தை எடுத்து சூர்யா எல்லோரிடமும் காட்டி என்னடா இது மாதிரி கிப்ட் கொடுத்து இருக்கானு உங்களுக்கு சந்தேகம் வந்து இருக்கும் இல்ல அது வேற ஒன்னும் இல்ல சில பேரு என் தங்கத்தை இந்த வீட்டு வேலைக்காரின்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க ஆனால் இவன் இந்த வீட்டு வேலைக்காரி கிடையாது இந்த வீட்டோட இளவரசி மகா ராணி என்று கிரீடம் சூட்ட,அனைவரும் கைத்தட்டுகிறனர்.

இதனைப் உள்ளே இருந்து பார்த்த சுந்தரவல்லி கடுப்பில் கழுத்தில் இருந்த மாலையை அறுத்து போட்டு தூக்கி வீசிவிட்டு கோபமாக போக இதனை நந்தினி பார்த்துவிடுகிறார்.பிறகு சூரியா நந்தினியை சேரில் உட்கார சொல்ல நந்தினி தயங்க,நீ இளவரசி உக்காரு என்று சொல்லி வற்புறுத்தி உட்கார வைக்கிறார்.பிறகு கால் மேல் கால் போட்டு உக்கார சொல்ல,நந்தினி வேண்டாம் என்று சொல்ல நான் சொல்றது கேளு நீ இந்த வீட்டோட மகாராணி என்று சொல்லி கால் போட சொல்ல நந்தினியும் கால் மேல் கால் போட்டு உட்காருகிறார். உடனே லேடிஸ் கிளப்பில் இருப்பவர்கள் நம்ம கிளம்பலாம் என்று சூர்யாவிடம் சொல்லிவிட்டு கிளம்புகின்றனர்.

உடனே நந்தினியும் கிரீடத்தை கழட்டி வைத்துவிட்டு நான் இந்த வீட்டோட மகாராணியும் இல்ல இளவரசியும் இல்ல நான் எப்பவுமே இந்த வீட்டோட வேலைக்காரி தான் அத சொல்றதுல எனக்கு எந்த ஒரு கௌரவ கொறச்சலும் இல்லை என்று சொல்லிவிட்டு நந்தினி சென்றுவிட பிறகு அனைவரும் சென்று விடுகின்றனர் அருணாச்சலம் சூப்பர் சூர்யா என்று பாராட்டுகிறார். நந்தினி தனியாக உட்கார்ந்து கொண்டு இருக்க விஜியும் அவரது கணவரும் வருகின்றனர். அவர் பண்ணதை நீங்களே பாத்தீங்களா என்று சொல்ல, அவன் பொண்டாட்டியோட பிறந்த நாளை கொண்டாடி இருக்கான் அதுல என்ன தப்பு இருக்கு என்று கேட்க அதற்கு நந்தினி நீங்களே இப்படி சொன்னா எப்படி அண்ணா என்று கேட்கிறார். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன்னோட ஆதார் கார்டுல பார்த்த டேட்ட பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரியும் அதுக்கப்புறம் தான் நாங்க கிப்ட் வாங்கணும். இவ்வளவு ஏற்படும் அதுக்கப்புறம்தான் என்று சொல்ல இதெல்லாம் எனக்காக இல்ல அவங்க அம்மாவை வெறுப்பேத்தறதுக்காக அவர் அப்படி பண்ணிக்கிட்டு இருக்காரு. அவரோட அன்பும் அக்கறையும் பொய்தான் என்று நந்தினி சொல்ல அதை நாங்கள் உண்மையில் சொல்லலாமா அவனோட மாற்றம் யோசிச்சு பாரு. மனசாட்சிக்கு ஒரு சக்தி இருக்கு நம்ம மனசார நினைக்கிற ஒவ்வொரு விஷயமும் கண்டிப்பா நடக்கும் என்று சொல்ல அப்போ நந்தினி நான் எங்க வீட்டுக்கு போகணும்னு நினைக்கிறேன் அது நடந்துருமா என்று கேட்கிறார். சரி இந்த பிரச்சனையை விடுங்க நாளைக்கு நான் கால் பண்றேன் ஃப்ரீயா இருந்தா கோயிலுக்கு போயிட்டு வருவோம் என்று சொல்லிவிட்டு இருவரும் கிளம்புகின்றனர்.

ரூமில் சுரேகாவும்,மாதவியும் கடுப்பாகி வந்து உட்கார இந்த சூரியா இப்படி பண்ணிட்டா அவளும் கால் மேல கால் போட்டு உட்காருடா என்று மாதவி சொல்ல நான் தான் உனக்கு எத்தனை வாட்டி சொன்னேன் அவளை அதட்டி வைன்னு அவ மகாராணியா அப்ப அவ மகாராணின்னா நம்ம யாரு என்று சுரேகா கேட்கிறார். இப்படியே போச்சுன்னா சூர்யா பேச்ச கேட்டு நம்பள மிரட்ட மாட்டானு என்ன நிச்சயம் ஏற்கனவே அப்பா அவளுக்கு சின்-சான் அடிச்சுக்கிட்டு இருக்காரு என்று சொல்ல அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை அவன் அம்மாவ வெறுப்பேத்தறதுக்கு அப்படி பண்ணிக்கிட்டு இருக்கான் என்று சொல்லுகிறார். நம்மளோட பிறந்த நாளை எப்பயாவது இது மாதிரி கொண்டாடி இருப்பானா? எல்லாத்துக்கும் காரணம் இந்த நந்தினி தான் என்று சொல்ல,கூடிய சீக்கிரம் அவளுக்கு ஒரு கொட்டு வச்சு உட்கார வைக்கணும் என்று சொல்லி பேசிவிட்டு சரி வா அம்மாவை போய் பாத்துட்டு வரலாம் என்று ரூமுக்கு வருகின்றனர்.

கோவமா இருக்கீங்களாமா என்று கேட்க உடனே சுந்தரவல்லி குளுகுளுனு இருக்கு என்று சொல்லுகிறார். என் உடம்புல இருக்குற ஒவ்வொரு நரம்பும் எரியுது என்று கத்த சூர்யா இப்படி பண்ணுவான் என்று நாங்கள் நினைக்கல என்று சொல்ல , நெனச்சு இருந்தா மட்டும் நீங்க என்ன பண்ணி இருப்பிங்க என்னடி பண்ணி இருப்பீங்க என்கிட்ட எதுவும் பேசாதீங்க, டென்ஷன் பண்ணாம இங்க இருந்து போங்க என்று சொல்ல, எங்களுக்கு மட்டும் எப்படிம்மா தெரியும் என்று சொல்ல, தெரிஞ்சிருக்கணும் தெரிஞ்சி இருக்கணும் டி இந்த வீட்ல தானே இருக்கீங்க அவ வந்து இவ்வளவு நாள் ஆகுது இதுவரை அவல தொறத்த ஏதாவது உருப்படியா ஒரு விஷயம் பண்ணி இருப்பீங்களா தண்டம் எல்லாமே தண்டம் தண்டத்த தான் நான் பெத்து வச்சிருக்கேன் என்ற திட்ட இருவரும் தெரிந்து ஓடுகின்றனர்.

சூர்யா ரூமில் குடித்துக் கொண்டிருக்க நந்தினி தூங்கப் போக, பர்த்டே கேர்ள் உன்னோட பிறந்த நாளை என்கிட்ட சொல்லலனா எனக்கு தெரியாதா என்று கேட்க, நிஜமாலுமே எனக்கும் தெரியாது ஆதார் கார்டு வச்சு விஜிதா உன் பிரண்டு கண்டுபிடிச்சு சொன்னா என்று சொல்ல என்கிட்ட முன்னாடியே சொல்லி இருந்தா நல்லா செலிபரேட் பண்ணி இருக்கலாம் இல்ல என்று கேட்க, எனக்கே தெரியாது சார் என்று நந்தினி சொல்லுகிறார். உனக்கே தெரியாதா என்று கேட்க கிராமத்தில எல்லாம் பிறந்தநாள் எல்லாம் கொண்டாட மாட்டாங்க என்று சொல்ல அப்ப இதுவரைக்கும் நீ பிறந்தநாளை கொண்டாடலையா என்று சொல்ல ஆமாம் என்று சொல்லுகிறார் அப்போ இன்னைக்கு வெட்டினது தான் உன் வாழ்க்கையிலே வெட்ன முதல் கேக்கா என்று கேட்க ஆமாம் என்று சொல்லுகிறார். பிறந்தநாள் அதுவும் கொஞ்சம் சிரிக்கலாம்ல என்று சொல்ல எனக்கு அது வராது என்று சொல்லுகிறார். உன்ன மாதிரி கேரக்டர் எனக்கு நிறைய கேரக்டர் தெரியும் அவங்களே அவங்கள வெறுத்துக்கிட்டு வேலை செஞ்சுகிட்டு இப்ப என்ன ஆகுமோ அதுக்கு அப்புறம் என்ன ஆகும்னு பயந்துகிட்டு இருக்கிற கேரக்டர் தான் நீ அவங்க அவங்கள பத்தி கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாங்க என்று நந்தினி பற்றி சூர்யா சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவிடம் நந்தினி பிரச்சனையிலிருந்து எங்க குடும்பத்தை காப்பாத்துறீங்க அதுக்காக நன்றி சொல்றதா இல்ல உங்க அம்மாவ வெறுப்பேத்திக்கிட்டு இருக்கீங்களே இதுக்காக வேதனைப்படுறதா என்று கேட்கிறார்.

சுந்தரவல்லி ஏன் பொறந்தானே தெரியல அவளுக்கு பிறந்தநாள் விழா வேற என்று கோபப்பட்டு கர்த்தர் சூர்யா நந்தினி என் பொண்டாட்டி அவளுக்கு நான் என்ன வேணாலும் பண்ணுவேன் என்று சொல்லுகிறார். உங்க மகனுக்கு நீங்க இருக்கீங்க அம்மா இருக்காங்க ஆனா என் குடும்பத்துக்கு என்ன விட்டா வேற யாரு இருக்கா என்று அருணாச்சலத்திலும் கேள்வி கேட்கிறார் நந்தினி. என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today episode update 31-01-25
moondru mudichu serial today episode update 31-01-25

The post சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, சூர்யா கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article