ARTICLE AD BOX
Gossip: ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு கடைசியில மனுசனையே கிடைச்சாச்சு. இது அந்த சர்ச்சை நடிகருக்கு பக்காவாக பொருந்துகிறது.
நடிக்க வந்த தொடக்கத்திலேயே இவர் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்தார். இருந்தாலும் தன்னுடைய கடின உழைப்பால் இன்று முன்னணி அந்தஸ்தில் இருக்கிறார்.
ஆரம்பத்தில் வாய் துடுக்கோடு பேசி வந்த நடிகர் இப்போது ஞானி போல் அமைதியாகிவிட்டார். ஆனால் இதெல்லாம் வெளிவேஷம் நடிகருக்குள் இன்னொரு முகம் இருக்கிறது என்கின்றனர்.
அடி மடியிலேயே கை வைத்த நடிகர்
தற்போது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நடிகர் பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வந்திருக்கிறது. அதிலும் வாரிசு நடிகை சேச்சி நடிகை என இவர் சேட்டை செய்யாத ஹீரோயின்களே கிடையாது.
இது மனைவிக்கு தெரிந்து கண்டித்து வந்தார். ஆனால் நடிகர் மச்சினிச்சி உடன் சேட்டை செய்தது தான் மனைவிக்கு பேரிடியாக வந்திருக்கிறது.
இருவரும் பார்ட்டி டான்ஸ் என என்ஜாய் செய்து வந்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் இந்த பழக்கம் அந்தரங்கம் வரை சென்றிருக்கிறது.
இது மனைவியின் காதுக்கு வந்ததால் தான் நடிகரை பிரிந்து இருக்கிறார். ஆனால் பிள்ளைகளுக்காக பிரச்சினையை பெரிதாக்காமல் அவர் இருக்கிறாராம்.
நடிகரின் மாமனார் பெரிய அந்தஸ்தில் இருக்கிறார். அப்படிப்பட்டவர் வீட்டிலேயே சேட்டை செய்த இவரை பற்றிய பேச்சு தான் இப்போது அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது.