ARTICLE AD BOX
வெயிலுக்கு உடலை குளிர்ச்சியாக்க ஏற்ற ஒரு சுவையான ஜூஸ் வீட்டில் எப்படி செய்வது என்று பார்ப்போம். வெறும் இரண்டு பொருட்கள் போதும் உடலை குளிர்விக்கும் ஜூஸ் ரெடி.
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய்
எலுமிச்சை
உப்பு
புதினா
செய்முறை
வெள்ளரிக்கயை நறுக்கி மிக்ஸியில் போட்டு அடித்து கொள்ளவும். பின்னர் அதில் சிறிது எலுமிச்சை சாறு உப்பு சேர்க்கவும். இதில் தேவைப்பட்டால் வெள்ளரியோடு புதினா சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
அவ்வளவு தான் வெயிலுக்கு ஏற்ற வெள்ளரிக்காய் ஜூஸ் ரெடியாகிவிடும்.
வெள்ளரிக்காயில் முழுக்க முழுக்க நீர்ச்சத்தும் வைட்டமின் சி உள்ளிட்ட சில ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இதில் உள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் உடல் மற்றும் சருமத்தில் ஏற்படும் இன்ஃபிளமேஷன்களைக் குறைத்து சரும ஆரோக்கியததை மேம்படுத்தும்.
அதோடு வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்த எலுமிச்சையும் சேர்த்து ஜூஸாக எடுத்துக் கொள்ளும்போது அது நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.