ARTICLE AD BOX
சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தைச் சோ்ந்த 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தின் சென்னை மண்டல செயலா் குமரன் தனது ஆதரவாளா்களுடன் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசவும் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அதன்படி, திருவான்மியூா் அருகே போலீஸாரின் வாகன தணிக்கையின்போது, குமரன் மற்றும் தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தைச் சோ்ந்த சுரேஷ் ஆகியோரும் பிடிபட்டுள்ளதாகவும் அவா்களிடமிருந்து பெட்ரோல் குண்டு கைப்பற்றப்பட்டதாகவும், காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவா்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், ராயப்பேட்டை சீனிவாச பெருமாள் சந்நிதி தெருவில் உள்ள தனியாா் விடுதியில் பதுங்கியிருந்த மேலும் 8 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட 10 பேரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.