சீமானுக்கு எதிரான வழக்கில் கஸ்தூரி யார் பக்கம்? ஒரேயொரு கேள்வியால் களேபரம்.! 

3 hours ago
ARTICLE AD BOX

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் நடிகை ஒருவரிடம் திருமண மோசடி செய்ததாக புகார் எழுத்து விசாரணை நடைபெற்று வருகிறது. நடிகை கொடுத்த புகாரின் பேரில், 14 ஆண்டுகள் சட்டப்போராட்டம் தற்போது முடிவுக்கு வரும் தருவாயில் இருக்கிறது. 

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சீமானிடம் விசாரணை தீவிரமடைந்து இருக்கிறது. இதுதொடர்பாக நோட்டிஸ் ஒட்டிச் சென்று, இரண்டு நாட்களாக அரசியல் மட்டத்தில் பெரும் விவாதத்தையும் உண்டாக்கி இருந்தது. சீமானுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் இருக்கின்றன.

ஹாஹாஹா.... கேட்டாலும் கேட்டேன் ஒரு கேள்வி...அப்பன் குதுருக்குள்ளே இல்லை கணக்கா இங்கே உப்பிக்கள் வந்து கதறுவதை பார்க்க செம்ம மஜாவா கீதுப்பா

— Kasturi (@KasthuriShankar) February 28, 2025

இதனிடையே, நடிகை & அரசியல் விமர்சகர் கஸ்தூரி, "விருப்ப உறவுக்கும் கற்பழிப்புக்கும் வித்தியாசம் இல்லையா? திருமண ஆசை காட்டி ஏமாற்றி   உறவுக்கொண்டு பிரிந்து  விட்டால்  குற்றம் ....  அப்போ இங்கு பல பெரிய மனிதர்கள் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி பிள்ளை பெற்று  பெரியாளாக்குவது? அதுக்கு பேரு என்ன ?" என கேள்வி எழுப்பி இருந்தார். 

இந்த விஷயம் சர்ச்சையை உண்டாக்கவே, பலரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதேபோல, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, 3 வயது சிறுமி வன்கொடுமை விவகாரத்தில், சிறுமியின் மீது தவறு உள்ளது என பேசியதற்கு நடிகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாரதி என்ற பெயருக்காகவாவது மனசாட்சியுடன் பேசியிருக்கலாம்

சீமான் எதோ சிறுமியை வன்புணர்வு செய்ததுபோல் சித்தரிக்கிறீர்களே என்று நியாயம் கேட்டால் தான் குற்றம்.
உண்மையாகவே வன்புணர்வு செய்தால்
குழந்தையின் தவறு .

விடியல் வாழ்க்கை குஷ்டமப்பா https://t.co/wtr5tkDS8F

— Kasturi (@KasthuriShankar) February 28, 2025
 
Read Entire Article