சீமானுக்கு ஆண்மை பரிசோதனை- நடிகை விஜயலட்சுமி பலாத்காரம், கருக்கலைப்பு வழக்கு விஸ்வரூபம்!

1 day ago
ARTICLE AD BOX

சீமானுக்கு ஆண்மை பரிசோதனை- நடிகை விஜயலட்சுமி பலாத்காரம், கருக்கலைப்பு வழக்கு விஸ்வரூபம்!

Chennai
oi-Mathivanan Maran
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை விஜயலட்சுமி பலாத்காரம் செய்யப்பட்டு பல முறை கருக்கலைப்புக்குள்ளாக்கப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆண்மை பரிசோதனை மற்றும் குரல் பரிசோதனை நடத்த போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீமான் குறித்த நடிகை விஜயலட்சுமியின் பலாத்கார புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் 2-வது மனைவி மகள் கயல்விழியை திருமணம் செய்வதற்கு முன்னதாக தாமும் சீமானும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்; தம்மை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியே பல முறை சீமான் பலாத்காரம் செய்தார்; இதனையடுத்து பல முறை கருக்கலைப்புக்கும் கட்டாயப்படுத்தினார்; ஆனால் தம்மை ஏமாற்றிவிட்டு கயல்விழியை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார் என்பதுதான் நடிகை விஜயலட்சுமியின் புகார்.

Vijayalakshmi Seeman

சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 2 முறை புகார் கொடுத்து பின்னர் திரும்பப் பெற்றார். சீமானுக்கும் தமக்குமான உறவுக்கு வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் இருப்பதாக விஜயலட்சுமி கூறிய நிலையில் பல்வேறு மிரட்டல்களால் அவர் வழக்கை வாபஸ் பெற்றார்.

இந்த நிலையில் தம் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை டிஸ்மிஸ் செய்த நீதிபதி இளந்திரையன், சீமான் மீதான பலாத்கார வழக்கு தீவிரமானது; விஜயலட்சுமியே வாபஸ் பெற்றிருந்தாலும் அவ்வளவு எளிதாக விட முடியாது; இதனை விசாரிக்கும் அதிகாரம் போலீசாருக்கு உண்டு; ஆகையால் சீமான் மீதான பலாத்கார வழக்கை விசாரித்து 3 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார்.

இதனால் சீமானுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. அதேநேரத்தில் சென்னை போலீசாரும் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் 15 பேர் சீமானுக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை வளசரவாக்கம் போலீசார் முன்பு நாளை மறுநாள் வரும் 27-ந் தேதி சீமான் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இதேபோல வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பிய போது, தமிழ்நாடு முழுவதும் இருந்தும் நாம் தமிழர் கட்சியினரை காவல் நிலையம் முன்பாக குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் சீமான்.

தற்போது விசாரணைக்கு ஆஜராக இருக்கும் சீமானிடம் ஆண்மை மற்றும் குரல் பரிசோதனை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கான நடவடிக்கைகளையும் சென்னை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பரிசோதனைகளைத் தொடர்ந்து சீமான் மீதான வழக்கி0ல் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வர்; இதன் பின்னர் சீமான் கைது செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறது எனவும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
English summary
Reports suggest that the police are taking steps to conduct a manhood test and voice analysis for Naam Tamilar Katchi’s chief coordinator, Seeman, in connection with actress Vijayalakshmi’s case, where she alleges rape and multiple forced abortions.
Read Entire Article