சீமானுக்கு அதிர்ச்சி..! நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நாமக்கல் மாவட்டச் செயலாளர்…!

12 hours ago
ARTICLE AD BOX

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நாமக்கல் மாவட்டச் செயலாளர்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் நாமக்கல் மாவட்டச் செயலாளர் பாஸ்கர். தமிழனின் முதன்மைப் பகையான வலது சாரிகளிடம், நேரடி கூட்டணி வைக்காத குறை ஒன்றே என்ற அளவிற்கு உறவு கொண்டு, உங்களது சுயநலனுக்காக தமிழ் தேசியத்தை அடமானம் வைத்து விட்டீர்கள். இனி உங்களுடன் பயணிப்பது, என் தாய்த்தமிழையும், தமிழர் நல் திருநாட்டையும் இடுகாட்டில் புதைக்கும் தமிழின துரோகம்.

நாங்கள் வயதையும் பொருளாதாரத்தையும் இழந்த அதே வேளையில், நீங்கள் பொருளாதாரத்தை பெருக்கி கொண்டே சுகவாசியாக மாறி வாழ்கிறீர்கள் என்று அறிந்து மகிழ்ச்சி தானே அண்ணா அடைந்தோம். ஏன் இந்த மாற்றம்?” என கேள்வி எழுப்பியுள்ள பாஸ்கர், சீமானின் கடந்த கால நிலைப்பாட்டையும், தற்போது அவர் எடுத்து வரும் நிலைப்பாட்டையும் ஒப்பிட்டு 20க்கும் மேற்பட்ட கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.

2000 ம் வருடங்களாக தமிழியத்தின் பண்பாட்டுப் பகை ஆரியம் என்று சொன்ன நீங்கள், 2009 இனப்படுகொலைக்கு பின் இங்கு தமிழ் தேசிய உணர்வோடு உள்ள அனைவரும் இன உரிமையை மீட்க ஒரு குடையில் அணி திரள வாருங்கள் என்று அறைகூவல் விடுத்த நீங்கள், தமிழ் பெற்ற பிள்ளைகள் தான் தெலுங்கு மலையாளம், கன்னடம், துளு என்று எடுத்துரைத்த நீங்கள், இன்று, அப்பிள்ளைகளை வந்தேறிகள் என தமிழனின் முதன்மை எதிரியாக கட்டமைத்து, உண்மையான பல நூற்றாண்டுப் பகைக்கு அரண் அமைத்து மடைமாற்றம் செய்வது ஏன்..?

விஜயலட்சுமி அவர்கள் தொடர்ந்த வழக்கின் தொடர்ச்சியாக தான் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றீர்களா? அப்படி இல்லையெனில் கடந்த 10 ஆண்டு ADMK ஆட்சி காலத்தில் நீங்கள் ஈழத்திற்காக செய்த நகர்வுகள் என்ன? இது தனிப்பட்ட பிரச்சனை என்றாலும் நீங்கள் பொது வெளியில் சொன்னதால் தான் இந்தக் கேள்வி; விஜயலட்சுமி முதலில் யார் என்று தெரியாது, பின்னர் மன்றாடிக் கேட்டதால் மனிதாபிமான அடிப்படையில் மாதம் 50,000 கொடுத்தேன். பின்னர் Maintain செய்ய 30,000 என்னிடம் கேட்டார், பின்னர் விருப்ப உறவு, உச்சமாக அவர் பாலியல் தொழிலாளி! இதற்கு strong ஆக fight செய்ய வேண்டி தான் சக தோழர் ஆனீர்களோ?” இனி உங்களுடன் பயணிப்பது – என் தாய்த்தமிழையும், தமிழர் நல் திருநாட்டையும் இடுகாட்டில் புதைக்கும் தமிழின துரோகமே.

இத்தனை வருடங்களாக என்னுடன் பயணித்து சுக துக்கங்களில் பங்கெடுத்த எனது அன்பு நாம் தமிழர் உறவுகள் அனைவர்க்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பலப்பல. இனியும் எனது தமிழ் தேசியப் பயணம் உண்மையான உறவுகளுடன் தொடரும் என தெரிவித்துள்ளார்.

The post சீமானுக்கு அதிர்ச்சி..! நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நாமக்கல் மாவட்டச் செயலாளர்…! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article