ARTICLE AD BOX
அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக சீனா விளங்குவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கே ருபியோ கூறியுள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த ருபியோ, ”21ஆம் நூற்றாண்டின் வரலாற்றின் பெரும்பகுதி, அமெரிக்கா, சீனா இடையிலான நிகழ்வுகள்தான் முக்கியத்துவம் பெற்றிருக்கும். அமெரிக்காவைப்,பயன்படுத்திக்கொண்டு உலகின் மாபெரும் வல்லரசாக மாற சீனா முனைந்திருக்கிறது. இதற்கு தாங்கள் தீர்வு காணப்போகிறோம். சீனா குறித்து அமெரிக்காவின் கொள்கைகள் அண்மைக்காலமாகவே மோசமாக இருந்து வந்திருக்கின்றன.
சீனாவை வளரும் நாடாக கருதி அதற்கு அளித்த சலுகைகள் தற்போது தங்களுக்கே எதிரானதாக மாறியுள்ளது. பனாமா கால்வாயை மேற்கொண்டு சீனா கட்டுப்படுத்த அனுமதிக்கமாட்டோம். ஆர்க்டிக் மற்றும் தென் அமெரிக்க பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. இதை எதிர்கொள்ளவே பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்தை இணைத்துக்கொள்ள ட்ரம்ப் ஆர்வம் காட்டுகிறார்” என்றார்.
இதற்கிடையே தங்கள் நாட்டுக்கு வரும் அமெரிக்க அமைச்சர் ருபியோவுடன் கால்வாய் குறித்து எதுவும் பேசப்போவதில்லை என பனாமா நாட்டின் அதிபர் பேசியுள்ளார்