ARTICLE AD BOX
கட்சியில் மாவட்ட செயலாளர்களை கூட முழுமையாக நியமிக்காத விஜய், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பேன் என்பது நகைப்புக்குரியது என திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் ஆதவ் அர்ஜுன், நிர்மல் குமார் இணைந்தது குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- தந்தை பெரியாரை அவமரியாதை செய்பவர்களை நாங்கள் வந்த மரியாதை கொடுப்பதில்லை என்றால் அவர்களை திமுக புறம்தள்ளுகிறது. இதன் வாயிலாக அவர்கள் ஊடக வெளிச்சம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அதற்கு முதலமைச்சர் வாய்ப்பு வழங்கவில்லை. பெரியாருக்கு திமுக எந்த விதத்தில் எதிர்வினை ஆற்றுகிறது என்று எதிர்பார்ப்பவர்களுக்கு முதலமைச்சர் அளித்திருக்கும் பதிலடி ஆகும். தமிழகத்தில் 3, 4 நாட்களுக்கு ஒருமுறை பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஈசிஆர் பெண்கள் காரில் விரட்டப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் திமுக என குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் அவர்களுக்கும் திமுகவுக்கும் தொடர்பு இல்லை. இதில் எனக்கு சந்தேகம் உள்ளது. அவர்கள் திமுகவும் இல்லை, திமுக அனுதாபிகளும் இல்லை. ஆனால் திமுக கொடியை கட்டிக்கொண்டு செய்கிறார்கள். இதை எல்லாம் பார்த்தால் ஏதோ நாடகம் நடப்பது போல உள்ளது.
ஏனென்றால் அவர்களால் ஆட்சி அதிகாரத்தில் பதில் சொல்ல முடியவில்லை. அதனால் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு பெண்களுக்கு திமுக அரசில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டு உள்ளது. தாய்மார்கள், வேலைக்கு செல்லும் பெண்கள், படிக்கும் மாணவிகளுக்கு செய்துள்ளார்.அதை கெடுப்பதற்கு இதுபோன்று திட்டமிட்டு வேலைகளை செய்கிறார்கள். என்னை கேட்டால் உளவுத்துறை எதிரிகளை இன்னும் நன்றாக கண்காணிக்க வேண்டும். பொதுவாக பாஜகவினர் தான் இதுபோன்ற சதி வேலைகளை செய்வார்கள். அவர்களுக்கு தான் இட்டு கட்டுவது. இல்லாததை இருப்பது போன்று பேசுவது போன்றவற்றை செய்கிறார்கள்.
சென்னைக்கு படிக்க வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆளுநர் சொல்கிறார். கடந்த வாரம்தான் அவர் வெளிமாநில மாணவிகளிடம் சென்னை பாதுகாப்பான இடம். இங்கு வந்து படிங்கள் என்று சொன்னார். ஆனால் இப்போது ஒரு வாரத்திற்குள் டைவ் அடிக்கிறார். ஒரு நேரம் ஒன்று பேசுகிறார். மற்றொரு நேரம் வேறு ஒன்று பேசுகிறார். அவருக்கு ஏதோ ஒரு அழுத்தம் உள்ளது. அதனால் மாற்றி மாற்றி பேசுகிறார். மகாத்மா காந்தியை இழிவுபடுத்துவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டுகிறார். காந்தியை இழிவுபடுத்துவது யார்? காந்தியை சுட்டுக்கொன்றது யார்? ரவி காந்தி புகழ்பாடுவதும், சாத்தான் வேதம் ஒதுவதும் ஒன்றுதான். இப்போதும் ஒரு பெண் பாஜக எம்.பி., காந்தியை துப்பாக்கியால் சுட்டு ரத்தம் வருவது போன்று செய்தார். கோட்சேவுக்கு விழா எடுக்க வேண்டும் என நீங்கள் சொல்கிறீர்கள். திராவிட தலைவர்கள் ஒருபோதும் காந்தியை இழிவு படுத்தி பேசியது இல்லை. கருத்து மாறுபாடு இருக்கலாம். மகாத்மா காந்தியின் இந்துத்துவா கருத்துக்களில் முரண்பாடு இருக்கலாம். காந்தி இறந்தபோது பெரியார் சொன்னார் இந்த நாட்டிற்கு காந்தி தேசம் என பெயர் வைக்க வேண்டும் என கூறினார். பாஜகவின் தலைவர்கள் சாவர்க்கர், ஹெட்கேவர், வாஜ்பாய், மோடி ஆகியோர் இதனை சொல்லி உள்ளனரா? எங்களுக்கு நீங்கள் பாடம் சொல்லித் தருவதா?
தமிழ்நாட்டில் பிரச்சினைகள் நடைபெறும் போது திமுகவின் கூட்டணி கட்சியினர் கருத்து சொல்வதுதான் வழக்கம். தொழிலாளர்கள் பிரச்சினை என்றால் இடதுசாரிகளும், பட்டியல் இனத்தவர் என்றால் திருமாவளவனும் ஆழமாக போராடுவார்கள். இதுபோன்று பொதுப்பிரச்சினைகளில் கருத்துசொல்வது வழக்கமானதுதான். அரசு நிர்வாகத்தில் சிறு பிரச்சினைகள் உள்ள போது அதை சுட்டிக்காட்டுவது கூட்டணி கட்சிகளின் உரிமையாகும். ஈசிஆர் விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்ட நபர் போலீசாரிடம் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக திமுக கொடியை கட்டியது தெரியவந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் யார் யாரிடம் பேசினார் என்ற பட்டியல் தன்னிடம் உள்ளதாகவும், அதை காவல்துறை வெளியிடாவிட்டால் தான் வெளியிடுவேன் என்று சொல்லியுள்ளார். அப்போது இத்தனை நாட்கள் ஏன் அவர் துங்கிக்கொண்டிருந்தார். மாணவி விவகாரத்தில் எப்ஐஆர் ஒன்றிய அரசுதான் வெளியிட்டது. அதை அண்ணாமலை வெளியிட்டார். இது எப்படி நடைபெற்றது. இந்த ஆட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த வேலைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் அண்ணாமலையை நீதிமன்றம் இழுக்க வேண்டுமல்லவா? ஆனால் அவரிடம் இதுவரை கேட்கவில்லை. அப்போது தமிழ்நாட்டை சுற்றி ஒரு சதிவலை நடைபெறுகிறது.
தமிழக வெற்றிக்கழகம் கட்சி அடுத்த வருடம் தேர்தலை சந்திக்க வேண்டும். அக்கட்சியின் தலைவர் விஜய் 2024 ஆண்டிலேயே கட்சி மாநாட்டை நடத்திவிட்டார். அதற்கு பிறகு மாவட்ட செயலாளர்களை நியமிக்க இத்தனை மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் 120 மாவட்டச் செயலாளர்கள் இல்லாமல் களத்தில் இறங்கிய ஒரு தலைவரை பார்க்கலாமா? நான் வந்து ஆட்சியை பிடித்துவிடுவேன் என்று சொன்னால் சிரிப்பார்கள். தவெகவில் பலர் சேருகிறார்கள் என்றால், அவர்களுடைய முந்தைய இயக்கத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதால்தான். தத்துவார்த்தமும், தலைவனின் உழைப்பும் இல்லாமல் எந்த ஒரு இயக்கமும் வளர்ந்துவிட முடியாது. விஜய் ஒரு நடிகர். அவருக்கு என்று ஒரு வாக்கு சதவீதம் உள்ளது. விஜய் கட்சியில் தேர்தல் வியூக வகுப்பாளராக ஆதவ் அர்ஜுனா வேலை பார்க்கிறார். சமுக வலைதள பிரிவு தலைவராக நிர்மல்குமார் சேர்ந்துள்ளார். இது அந்த கட்சிக்கு வலிமைதான். ஆனால் தேர்தல் வியூக வகுப்பாளரால் மட்டும் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துவிடாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.