ARTICLE AD BOX
பலரும் இளம் வயதிலேயே வயதுக்குரிய தோற்றம் இல்லாமல், அதைவிட வயதானவர்களாக தோற்றம் அளிக்கிறார்கள். அதனால், சீக்கிரம் வயது ஆவதை தினமும் இப்படி செய்தால் தடுக்கலாம் என்று டாடர் ஷர்மிகா ஆலோசனைகளைக் கூறுகிறார்.
உடல் ஆரோக்கியம் குறித்து டெய்சி ஹாஸ்பிட்டல் சென்னை (daisyhospital_chennai) யூடியூப் சேனலில் டாக்டர் ஷர்மிகா பேசியுள்ளார். சீக்கிரம் வயது ஆவதை தினமும் இப்படி செய்தால் தடுக்கலாம் என்று டாடர் ஷர்மிகா ஆலோசனைகளைக் கூறுகிறார்.
நார்மலாக இரவு 9.45 மணிக்கு தூங்குவதற்கு பதில், தினமும் இரவு நீண்ட நேரம் கண்விழித்து 1-2 மணிக்கு தூங்குகிறீர்கள் என்றால் உங்களுக்கு 20 வயதிலேயே 35 வயது ஆன மாதிரி முகத்தில் சுருக்கங்கள், தலையில் நரைமுடி, வயதான தோற்றம் வந்துவிடும் என்று டாக்டர் ஷர்மிகா எச்சரிக்கிறார்.
இரண்டாவது, உடற்பயிற்சி என்றாலே எனக்கு சுத்தமாக ஒன்னுமே தெரியாது என்று உடற்பயிற்சி செய்யாமல் இருப்பவர்களுக்கு சீக்கிரமாக வயதான தோற்றம் வரும் என்று டாக்டர் ஷர்மிகா எச்சரிக்கிறார்.
அதே போல மூன்றாவது, இருப்பதை சாப்பிட்டுக்கொள்ளலாம், காலையில் ஒரு இட்லி, தோசை, மதியம் சோறு, ரசம் சாப்பாடு, தயிர் சாப்பாடுதான் சாப்பிடுவேன், காய்கறி பொரியல் வேண்டாம், இரவும் இட்லி, தோசை டிஃபன் என்று தினமும் உணவுமுறை கொண்டவர்களுக்கும் சீக்கிரமாக வயதான தோற்றம் வந்துவிடும் என்று என்று டாக்டர் ஷர்மிகா எச்சரிக்கிறார்.
அப்போது சீக்கிரமாக வயதாகக் கூடாது என்றால் என்ன செய்ய வேண்டும் என்றால், டாக்டர் ஷர்மிகா மேலே கூறிய இந்த 3 விஷயங்களையும் தவிர்க்க வேண்டும் என்கிறார். அதற்கு பதில், தினமும் இரவு 9.45 மணிக்கு தூங்கப் போய் 10.30 மணிக்கு நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றுவிட வேண்டும். இரண்டாவது, உடற்பயிற்சி செய்ய வேண்டும். காலையில் 1 மணி நேரம் நடைபயிற்சி செய்யுங்கள், மாலையில் 1 மணி நேரம் நடைபயிற்சி செய்யுங்கள். அதற்கு பிறகு, நீங்கள் உடலை வலுப்படுத்த பயிற்சி செய்யலாம். ஆனால், நடைபயிற்சி செய்யுங்கள், ஏதாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.
தினமும் நல்ல உணவுகளை தினமும் ஏதாவது ஒன்று எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவு வாரத்திற்கு ஒருநாள், பயறு வகைகள் வாரத்திற்கு 2 நாள் என்று ஏன் டேட் வைக்கிறீர்கள். நல்ல உணவுகளை தினமும் எடுத்துக்கொள்ளுங்கள். இட்லி வாரத்திற்கு ஒரு நாள் தாராளமாக சாப்பிடலாம்.
இதையெல்லாம் செய்தால், வயதாவதற்கு காரணமான சீக்கிரமாக மாதவிடாய் நிற்பது, கருவளையம், நரைமுடி , எலும்பு வலி, வயதான தோற்றம், இது எல்லாமே ரிவர்ஸ் ஆகி ஆரோக்கியமாக இளமையாக இருப்பீர்கள். உடல் எடை கூடிவிட்டீர்கள் என்றால் உடல் எடையைக் குறையுங்கள். சரியான உடல் எடை இருந்தால் சரியான வயதில் தெரிவோம் என்று டாக்டர் ஷர்மிகா கூறுகிறார்.