ARTICLE AD BOX
Tamil Nadu BJP state president Annamalai : தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதே பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.எனவே வரும் நாட்களில் அதிகபட்ச வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே மக்கள் பகல் வேலைகளில் வெளியில் வருவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து வெயிலில் இருந்து மக்களை காத்திடும் வகையில நீர் மோர் பந்தல் அமைக்க பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.
மக்களே உஷார்! இனி வெயில் சுட்டெரிக்கப்போகுதாம்! சென்னை வானிலை மையம் சொன்ன டேஞ்சர் அலர்ட்!
அதிகரிக்க தொடங்கும் வெப்பம்
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கைச் சீற்றங்களின்போதும், பிரச்சினைகளின்போதும், தமிழக பொதுப் மக்களுக்கு உறுதுணையாகக் களத்தில் நின்று, அவர்கள் துயர் துடைத்து, மீட்புப் பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் முன்னின்று செயல்படுவது, தமிழக பாஜக சகோதர சகோதரிகளின் இயல்பு. ஒவ்வொரு ஆண்டும், கோடைக் காலத்தின்போது, தாமாக முன்வந்து, தண்ணீர்ப் பந்தல்களும், மோர்ப் பந்தல்களும் அமைத்து, மக்களின் தாகம் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள் நமது சகோதர, சகோதரிகள்.
நீர், மோர் பந்தல் அமையுங்கள்
இந்த ஆண்டும் கோடைக் காலம் தொடங்கி விட்டது. வெயிலின் கடுமை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தமிழக பாஜக சகோதர சகோதரிகள், பொதுமக்களின் தாகம் தீர்க்கும் உன்னதப் பணியில் மீண்டும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது. குறிப்பாகப், பேருந்து நிறுத்தங்கள், பள்ளிகள், சந்தைகள் எனப் பொதுமக்கள் அதிகம் கூடம் இடங்கள் அருகே தண்ணீர்ப் பந்தல்கள், மோர்ப் பந்தல்களை அமைப்பது,
வற்புறுத்தி வாங்கிய கடிதம்.! பொதுமக்கள் உயிரை மலிவாக எண்ணுவதா- சீறும் அண்ணாமலை
கோடை காலம் முழுவதும் பராமரியுங்கள்
அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் அமையும்.தமிழகத்தின் ஒவ்வொரு பூத் அளவிலும் நமது சகோதர சகோதரிகள் தங்களால் இயன்ற அளவில், தண்ணீர்ப் பந்தல்கள், மோர்ப் பந்தல்கள் அமைத்திடுவதோடு, கோடைக்காலம் முழுவதுமே அவற்றைப் பராமரித்துப், பொதுமக்களுக்குத் தொடர்ந்து பயன்படுமாறு செய்ய வேண்டும் என்று. தமிழக பாஜக சகோதரிகள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.