ARTICLE AD BOX
சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு சமீபத்தில் "மதராஸி" என்ற டைட்டில் வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த படத்திற்கு முன்னதாக "வேட்டையன்" என்ற டைட்டில் தான் முடிவு செய்யப்பட்டு இருந்ததாகவும், ஆனால், ரஜினிகாந்துக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவே டைட்டில் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் "மதராஸி" படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது என்பது தெரிந்தது.
"மதராஸி" என்ற பெயரில், ஏற்கனவே ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்த ஒரு படம் சில ஆண்டுகளுக்கு முன் வெளியானது. ஆனால் முதலில், இந்த படத்திற்கு "Hunter" என்ற ஆங்கில டைட்டிலை வைக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், தமிழில் "வேட்டையன்" என்ற பெயரில், ரஜினிகாந்த் நடித்த ஒரு படம் ஏற்கனவே வெளியாகியிருந்ததால், அதே அர்த்தம் தரக்கூடிய "Hunter" என்ற பெயரை வைத்தால், ரஜினிக்கு தர்மசங்கடம் ஏற்படும் என்பதால், படத்தின் டைட்டில் "மதராஸி" என மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
ரஜினி மீது சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் இருவருமே மிகுந்த மதிப்பு, மரியாதை கொண்டுள்ள நிலையில், அவருக்கு எந்தவிதமான தர்மசங்கடமும் ஏற்படுத்த வேண்டாம் என்பதற்காகவே படத்தின் பெயர் மாற்றப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.