சிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குநர்! ரூ.1000 கோடி வசூல் கொடுத்தவர்..யார் தெரியுமா?

3 hours ago
ARTICLE AD BOX

Sivakarthikeyan To Act In Director Atlee Film : தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர், சிவகார்த்திகேயன். கடந்த 10 வருடங்களில் அசுர வளர்ச்சி கண்ட ஹீரோக்களும் ஒருவரான இவர், இப்போது 100 கோடி வசூல் கொடுத்த நாயகனாகவும் மாறிவிட்டார். இவர் அடுத்த படத்தில் யாருடன் இணை இருக்கிறார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. 

சிவகார்த்திகேயன் நடிக்கும் இரண்டு படங்கள்:

நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்திற்கு பிறகு இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் மதராசி திரைப்படம். சிவகார்த்திகேயனின் 23வது படமான இது, ஆக்சன் திரில்லர் பானையில் உருவாகி வருகிறது. இந்தப் படத்துடன் சிவகார்த்திகேயன் கமிட்டாகி பணியாற்றி வரும் படம், பராசக்தி. இந்த படத்தை, சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். முக்கிய கதை பாத்திரங்களாக அதர்வா, ஸ்ரீலீலா நடிக்க, நெகட்டிவ் கேரக்டரில் ஜெயம் ரவி வருகிறார். 

இந்த இரு திரைப்படங்களுமே, தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களாக உள்ளது. இந்த படங்களை எடுத்து சிவகார்த்திகேயன் இந்த இயக்குனருடன் கைகோர்க்க இருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அட இவரா!

சிவகார்த்திகேயன் அடுத்ததாக தனது நண்பரும் இயக்குனருமான அட்லீயுடன் கைகோர்க்க இருப்பதாக கூறப்படுகிறது. ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லீ, தமிழில் ராஜா ராணி படத்தை இயக்கி அறிமுகமானார். இதையடுத்து தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கி ஹிட் கொடுத்தார். ஷாருக்கானை வைத்து ஜவான் படம் மூலம் சமீபத்தில் சுமார் 1100 கோடி கலெக்சன் கொடுத்து இந்திய அளவில் பெரிய இயக்குனராக மாறியிருக்கிறார். அட்லீ, ஷாருக்கானை அடுத்து சல்மான் கானை வைத்து ஒரு படத்தை இயக்க இருந்தார். ஆனால் அந்த படம் டிராப் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் அட்லியும் சிவகார்த்திகேயனும் சமீபத்தில் சந்தித்துக் கொண்டதாகவும், இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இவர்கள் இருவரும் சமீபத்தில் சந்தித்துக் கொண்டதாகவும், இவர்கள் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதைக்கேட்ட பலர், “அட இவரா?”  என வாய்பிளந்துள்ளனர்.

SK

இருவரும் ஏற்கனவே நண்பர்கள்:

அட்லீ, சிவகார்த்திகேயனின் பழைய நண்பர்களுள் ஒருவர். அட்லீயின் முதல் குறும்பட ஹீராேவே இவர்தான். அதில், பிரியா அட்லீதான் ஹீராேயினாக நடித்திருந்தார். ஒரு விழா மேடையில், தன்னை தனது முதல் பட தயாரிப்பாளருக்கு அறிமுகம் செய்து வைத்ததே சிவகார்த்திகேயன்தான் எனக்கூறி, அட்லீ நன்றி தெரிவித்தார். இவர்கள் இருவரும் ஒன்றாக ஒரு படத்தில் இணைகிறார்களா இல்லையா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வேறு யாருடன் இணைய வாய்ப்பு?

சிவகார்த்திகேயன், அடுத்ததாக டான் படத்தின் இயக்குநரான சிபி சக்கரவத்தியின் ஒரு படத்தில் கமிட் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இது பேச்சுவார்ததைக்கு மேல் செல்லவில்லை என்றும், அடுத்ததாக அவர் குட் நைட் படத்தின் இயக்குநரான விநாயக் ரவிச்சந்திரனுடன் ஒரு படத்தில் இணைவதாகவும் கூறப்படுகிறது. இதில் எது உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | நயன்தாராவுக்கு ஜோடியாக வேண்டியவர்! இப்போ அவருக்கு வில்லனாக நடிக்கிறார்..யார் தெரியுமா?

மேலும் படிக்க | 1 படத்தில் 9 படங்களின் குறியீடு! குட் பேட் அக்லி டீசரில் இதை கவனிச்சீங்களா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article