ARTICLE AD BOX
பாதுகாப்புத் துறை விஞ்ஞானி ஒருவருக்கு ஐந்து சிறுநீரகங்கள் இருக்கிறது என்று சொன்னால் நம்பமுடிகிறதா?
அனைவருக்கும் 2 சிறுநீரகங்கள் இருப்பது இயல்பே. ஆனால், வளர்ச்சியடைந்து வரும் மருத்துவ துறையில், 2ஐ மூன்று, நான்கு என மாற்றுவதற்கு கூட அதிக வாய்ப்பிருக்கிறது. அந்தவகையில் விஞ்ஞானி தேவேந்திர பார்லேவர் சிறுநீரக பாதிப்பு காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2010ம் ஆண்டிலிருந்து இவருக்கு சிறுநீரக நோய் இருந்து வருகிறது. தற்போது இவருக்கு 47 வயதாகிறது.
முதல்முறை, அதாவது 2011ம் ஆண்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் அவரது தாயாரின் சிறுநீரக பொருத்தப்பட்டது. ஆனால் அது ஒரு வருடம் மட்டுமே இருந்தது. இரண்டாவது உறுப்புமாற்று அறுவை சிகிச்சை 2012-ம் ஆண்டு நடந்தது.
இதற்கடுத்தது 2022ம் ஆண்டு கொரோனாவால் அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. இதனால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. பின்னர் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த மாதம் ஒரு சிகிச்சை நடத்தப்பட்டது.
ஆனால், ஏற்கனவே நான்கு செயல்படாத சிறுநீரகம் இருந்ததால், இந்த சிகிச்சை மிகவும் சவாலாக மாறியது. பின்னர் 5-வதாக ஒரு சிறுநீரகம் பொருத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் ஒன்று மட்டுமே செயல்படுகிறது. அதன்பிறகு தொடர் சிகிச்சை மூலமாக குணமடைந்து 10 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இப்போது முதலில் இருந்த நான்கு சிறுநீரகங்கள் வேலை செய்யவில்லை. இப்போது பொருத்திய ஒன்றே ஒன்று மட்டும்தான் வேலை செய்கிறது.
கடைசியாக பொருத்தப்பட்ட இந்த சிறுநீரகத்திற்கு கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால், சென்ற மாதமே அவருக்கு கிடைத்தது.
இப்போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு பார்லேவர் மீண்டும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். ஒரு முறை மட்டுமல்ல, மூன்று முறை சிறுநீரகம் பெற்றிருப்பது பார்லேவரின் அதிர்ஷ்டம். ஏனென்றால் பெரும்பாலான மக்களுக்கு சிறுநீரகம் பெறுவது கூட சவாலானது என்று டாக்டர் சர்மா கூறினார்.
உலகம் இதுவரை கேள்விப்பட்டதிலேயே மிக அரிதான மருத்துவ நிகழ்வுகளில் ஒன்றாகவும் இது திகழ்கிறது.