ARTICLE AD BOX

Image Courtesy: @TheRealPCB / @BLACKCAPS / X (Twitter)
வெல்லிங்டன்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நாளை காலை 6.45 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெற உள்ளது. இந்த டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணிக்கு சல்மான் அலி ஆகாவும், நியூசிலாந்து அணிக்கு மைக்கேல் பிரேஸ்வெலும் கேப்டன்களாக செயல்பட உள்ளனர்.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் குறித்து பாகிஸ்தான் புதிய கேப்டன் சல்மான் ஆகா சில கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இத்தொடருக்கான எங்கள் அணியில் சில இளம் வீரர்கள் உள்ளனர். மேலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட பிறகு சர்வதேச அளவில் தங்கள் திறமையை வெளிப்படுத்த அவரளுக்கு இது ஒரு வாய்ப்பாகும்.
இந்த தொடருக்காக எங்கள் அணியினர் மிகவும் சிறப்பாக தயாராகி வருகின்றனர். இதன் மூலம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு நல்ல முடிவுகளைப் பெற முயற்சிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.