ARTICLE AD BOX

சென்னை,
1995-ல் வெளியான 'முறை மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் அருண் விஜய். கவுதம் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துக்கு வில்லனாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து அவர் நடித்த 'தடம்', 'குற்றம் 23', 'செக்கச் சிவந்த வானம்', 'மாபியா' ஆகிய படங்களின் வெற்றி, அருண் விஜய்க்கு திருப்பங்களாக அமைந்தன.
இவரது நடிப்பில் சமீபத்தில் 'வணங்கான்' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் பாலா இயக்கிய இப்படத்தில் நடிகர் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜய்யுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதனை தொடர்ந்து கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் தனது 36-வது படமான 'ரெட்ட தல' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், சென்னை ஐஐடி (IIT) Techofes 2025 மெட்ராஸ் வளாகத்தில் ஆண்டுதோறும் தமிழ் திரைப்படத்துறையில் சிறந்த படைப்புகளை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கும் விழா நடைபெறும். அந்த வகையில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் அருண் விஜய்க்கு 'வணங்கான்' படத்திற்காக சிறந்த முன்னணி நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.