தயாரிப்பாளரான 'தசரா' இயக்குனர்

9 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம் 'தசரா'. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்த இப்படம் ரூ. 110 கோடிக்கும் மேல் வசூலித்தது.

இப்படத்தைத்தொடர்ந்து, நானியின் 33-வது படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கி வருகிறார். இப்படத்திற்கு 'தி பாரடைஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வைரலானது.

இந்நிலையில், ஸ்ரீகாந்த் ஒடேலா தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். 'குலாபி' எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தை அனுராக் ரெட்டி மற்றும் சரத் சந்திரா ஆகியோருடன் இணைந்து ஸ்ரீகாந்த் தயாரிக்கவுள்ளார். இப்படத்தை சேத்தன் பந்தி இயக்கவுள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு கோதாவரிகானி இடத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது.

Read Entire Article