சிறகடிக்க ஆசை: மீனாவுக்கு அடித்த ஜாக்பாட்… இனி பணக்காரிதான்!!

5 hours ago
ARTICLE AD BOX

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா ஒரு மிகப்பெரிய பண விஷயத்தில் சிக்கிக்கொண்டார். தற்போது அதுவே அவருக்கு மிகப்பெரிய ஜாக்பாட்டாக அமைந்துள்ளது.

இந்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவுக்குதான் மிகப்பெரிய ஆப்பு வந்தது. அதுவும் இந்த சிந்தாமணியால். மீனாவுக்கு ஒரு கல்யாண ஆர்டர் வந்தது. சுமார் 2 லட்சம் ஆர்டர். உடனே மீனா சந்தோஷப்பட்டு ஒரு அக்ரீமன்ட்டில் கையெழுத்திட்டார்.

சந்தோஷமாக வீட்டில் வந்து இந்த விஷயத்தை கூறினார். முத்து மிகவும் சந்தோஷப்பட்டார். ஆனால், விஜயா ரோகிணிக்கு பொறாமையாக இருந்தது. அண்ணாமலையோ மீனாவை புகழ்ந்து தள்ளினார்.

மீனா போட்ட அந்த கையெழுத்துதான் மிகப்பெரிய ஆப்பாக மாறியது. அதாவது அந்த ஆர்டர் மீனாவுக்கு கிடைப்பதற்கு காரணம் சிந்தாமணி தான். அந்த அக்ரீமெண்டில் கையெழுத்து வாங்கியதும் சிந்தாமணி தான். அதன்படி அந்த அக்ரீமெண்டில் மீனாவுக்கு ஆப்பு வைக்கும் விதமாக சில சதிகளை சிந்தாமணி பண்ணி இருந்தார். மீனாவின் பிசினஸை முழுவதுமாக முடிக்கத்தான் இதெல்லாம் செய்திருந்தார். இதையறிந்த விஜயா மன நிம்மதி அடைந்தார்.

ஆனால், தற்போது இதிலிருந்து மீனா தப்பித்திருக்கிறார். சிந்தாமணிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணிய மீனா, சீதா மூலம் சிந்தாமணிக்கு போன் செய்து பொன்னியம்மன் கோயிலுக்கு வரவைத்தார். மண்டபத்தின் ஓனரையும் மீனா அங்க வரவழைத்துவிட்டார். பின் கோயிலுக்கு வந்த மேனேஜர்- சிந்தாமணி இருவருமே மீனா ஏமாந்து போனதை பற்றி பேசி சிரித்தார்கள். அதை மீனாவும், மண்டப ஓனரும் பார்த்துவிட்டார்கள். மிகவும் கோபமான ஓனர், மேனேஜரை கண்டபடி திட்டிவிட்டார். ஓனர் பணத்தை மேனேஜரிடம் வாங்கி மீனாவிடம் கொடுத்துவிடுகிறார். பின் அவர், இனிமேல் இந்த மண்டபத்தின் பக்கமே உன்னையும், சிந்தாமணியும் பார்க்க கூடாது என்று திட்டி விடுகிறார்.

மேலும் இனி இந்த மண்டபத்தில் நடக்கும் அனைத்தும் ஈவன்ட்டுக்கும் மீனாவுக்குதான் ஆர்டர் என்று கூறிவிடுகிறார். அதற்குப்பின் பணம் வட்டிக்கு வாங்கிய பைனான்சியரை சந்தித்து நடந்ததை சொல்லி பணத்தை கொடுத்து விடுகிறார். பைனான்சியர், இனி உனக்கு எந்த உதவி என்றாலும் என்னிடம் கேளுமா என்று சொல்கிறார்.

இதை அறிந்து வீட்டுக்கு வந்த முத்து, ஸ்வீட் கொடுத்து மகிழ்கிறார். விஜயா காண்டாகிறார். மனோஜ் நக்கலுடன் பேசுகிறார். அண்ணாமலை அவர்களை திட்டுகிறார்.

இதையும் படியுங்கள்:
உங்களைப் பிறர் மதிக்காமலிருப்பதற்கு கூறப்படும் 7 விதமான காரணங்கள் என்னென்ன தெரியுமா?
Siragadikka aasai
Read Entire Article