ARTICLE AD BOX
“சிம்பொனி இசை நிகழ்ச்சி எனது பெருமை அல்ல; இந்த நாட்டின் பெருமை.” என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா ‘வேலியன்ட்’ எனும் தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சியை, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் மார்ச்.8ஆம் தேதி அரங்கேற்ற உள்ளார். இதையொட்டி, இளையராஜாவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், லண்டன் செல்வதற்காக இன்று காலை இளையராஜா சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் அளித்தப் பேட்டியில், “சிம்பொனி இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும். ரசிகர்களைப் போல் நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்துவது எனக்கான பெருமை அல்ல; இந்த நாட்டின் பெருமை. Incredible இந்தியா மாதிரி, நான் Incredible இளையராஜா.” என்று பெருமிதத்துடன் கூறினார்.
இந்த நிகழ்வை தமிழராக எப்படி உணர்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “ஒரு மனிதனாக எப்படி உணர்கிறீர்கள் என்பது தான்” என்றார். மேலும் சில கேள்விகளுக்கு, ‘நீங்கல் எல்லாம் சேர்ந்துதான் நான். ஒரு நல்ல விஷயத்துக்காகச் செல்கிறேன், தேவையற்ற கேள்விகளைத் தவிர்க்கவும்’ என்று கூறினார்.