ARTICLE AD BOX
சிம்பு நடிக்கவிருக்கும் 51-வது படம் பற்றிப் பார்க்கலாம்.. வாங்க..
சிம்பு-அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகும் காட் ஆஃப் லவ் (God Of Love) படத்தின் கதைச்சுருக்கம் பற்றிப் பார்ப்போம்..
கடந்த ஆண்டில் சிம்பு நடித்த ஒரு படம் கூட வெளியாகவில்லை. இச்சூழலில் ரசிகர்களுக்காக தனது பிறந்த நாளன்று 4 படங்களின் அப்டேட் வெளியிடப்பட்டது.
அவ்வகையில், சிம்புவின் 48-வது படமான ‘தக் லைஃப்’ பட சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டது. பின்னர், 49-வது படத்தை ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
சிம்பு – தேசிங்கு பெரியசாமி கூட்டணியில் 50-வது படம் உருவாக உள்ளது. இப்படத்தின் மூலம் சிம்பு தயாரிப்பாளராக அறிமுகம் ஆகிறார். அவரின் ஆத்மன் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தான் ‘எஸ்டிஆர்-50’ படத்தை தயாரிக்க உள்ளது.
இதனைத் தொடர்ந்து, 51-வது படத்தை ‘ஓ மை கடவுளே’ பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளார். இப்படத்திற்கு ‘God Of Love’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், படத்தின் கதைச் சுருக்கத்தையும் இயக்குனர் அஸ்வத் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
அதாவது ‘காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை… மீறி அவன் பூமி வந்தால் என்ன நடக்கும்? என்பது தான் இப்படத்தின் கதைச்சுருக்கம்.
இதன்மூலம் சிம்பு இப்படத்தில் கடவுளாக நடிப்பது உறுதியாகி உள்ளது. ‘ஓ மை கடவுளே’ பட பாணியில் இதுவும் ஒரு ஃபேண்டஸி கதையம்சம் கொண்ட படமாக உருவாக உள்ளது.
‘கதைச்சுருக்கம்’ என்னன்னு ஆவலாய் வாசித்தால் அஜித் சார் நடித்த ‘தீனா’ படத்தில் வர்ற ‘சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்..’ பாட்டின் வரிகளை எழுதி வைத்திருக்கிறார். இது கதைச்சுருக்கம் இல்ல, ‘கரு’. மேலும், இதற்கு முன்னதாக கவியரசு கண்ணதாசன், ‘கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்..’ என இதற்கு விரிவுரையே வழங்கி விட்டார்.
அவ்வகையில், சிம்பு நடிப்பில், அஸ்வத் எழுதிய கதை எப்படியோ.. படம் வரட்டும் பார்க்கலாம்.!
The post சிம்பு நடிக்கும் ‘God Of Love’ படத்தின் கதை, அஜித் படத்தின் பாட்டு வரிதான்ங்க.. appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.