ARTICLE AD BOX
இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் நம் உடலுக்கு தேவையான ஆற்றலையும், நோய் எதிர்ப்பு சக்தியையும், உடலில் ஏற்படும் பிரச்னைகளையும் தடுக்க உதவுகிறது. அந்த வகையில், சின்ன வெங்காயம் நமக்கு பெரிய நன்மைகளை கொடுக்கிறது. இந்த வெங்காயத்தை வைத்து சுவையான சட்னி செய்வது எப்படி என்பதை பார்ப்போமா?
வரமிளகாயயை வெந்நீரில் ஊறவைத்து, அதனுடன், உப்பு, உரித்த சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து, நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும். அதனை நல்லெண்ணெயுடன் சேர்த்து தோசை இட்லி உள்ளிட்ட உணவுகளுக்கு தொட்டு சாப்பிடலாம். இந்த சின்ன வெங்காயத்தில், ஃபீனால் கண்டன்ட் அதிகம் உள்ள உணவுப்பொருள். இதில் பாலிஃபினால்ஸ்சும் அதிகம் உள்ளது. இவை இரண்டுமே உடலுக்கு மிகுந்த நன்மை தரக்கூடியது.
இந்த சின்ன வெங்காயத்தில் சட்னி அறைத்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த சின்ன வெங்காயம்,ரத்தத்தில் உள்ள கொழுப்பையும், ரத்த குழாயின் உள்ளே உள்ள அடைப்புகளையும் நீக்கும் திறன் கொணடது. இந்த சின்ன வெங்காயத்தில் சட்னி அறைத்தால் அதிகமாக எண்ணெயில் வதக்கி அதன் நன்மைகள் அனைத்தையும் வீணடித்துவிடுவார்கள். ஆனால் வெங்காயத்தில் பயன் நமக்கு சரியான முறையில் கிடைக்க வேண்டும் என்றால், அதை எண்ணெயில் அதிகம் வதக்க கூடாது.
வெங்காயத்தின் முழு பலனும் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால், அதன் பச்சைத்தன்மையுடன் சாப்பிட பழகிக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.