கடந்த சில வாரங்களாக நாம் கேள்விப்பட்டு வரும் Realme P3 Pro மொபைல் குறித்தான தகவலில், இந்தியாவில் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது என ரியல்மி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்தான சிறப்பம்சங்களை தெரிந்து கொள்வோம்

ரியல்மி பி3 ப்ரோ குறித்தான தகவல்களை அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, “ ரியல்மி இந்தியாவிலிருந்து நேராக விற்பனைக்கு வருகிறது, இது ரியல்மி பி3 ப்ரோ - கேமர்கள் மற்றும் ட்ரெண்ட்செட்டர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது ஸ்னாப்டிராகன் 7s ஜெனரல் 3 SoC ஆல் இயக்கப்படும், இது அதன் பிரிவில், இந்த சிப்பைக் கொண்டிருக்கும் முதல் ஸ்மார்ட்போன்.
கூடுதலாக, பி3 ப்ரோ ஒரு குவாட்-கர்வ் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும், இது மற்றொரு பிரிவு முதல் அம்சமாக இருக்கும் என்று Realme கூறியிருக்கிறது.

மேலும் நீடித்த செயல்திறனுக்காக, Realme P3 Pro ஆனது 6050mm² குளிரூட்டும் பகுதியுடன் "Aerospace VC கூலிங் சிஸ்டம்" கொண்டிருக்கும். இதனால் வெப்பமடைதல் தடுக்கப்ப்டும் என கூறப்படுகிறது.

Realme P3 Pro பேட்டரியானது 80W சார்ஜிங் ஆதரவுடன் 6,000 mAh டைட்டன் பேட்டரி கொண்டிருக்கும். Realme P3 சீரிசில் இரண்டு ஸ்மார்ட்போன்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: Realme P3 Pro மற்றும் Realme P3.

Also Read: Deepseek AI: ஷாக்கில் டிரம்ப்! வரி நெருக்கடிக்கு டீப்சிக் ஆயுதத்தை எடுத்த சீனா! ஒரே நாளில் ரூ5 லட்சம் கோடி நஷ்டம்

கேமிங்கின் போது நிலையான பிரேம் விகிதங்கள், குறைந்த தாமதம் மற்றும் உகந்த பேட்டரி செயல்திறன் ஆகியவற்றிற்கான பட்ஜெட்டான மொபைல் என கூறப்படுகிறது.

Realme P3 தொடர் பிப்ரவரி 18 அன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், Flipkart மற்றும் நிறுவனத்தின் இணையதளத்தில் விற்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி பி3 மொபைலானது, ரூ.19,990 என்ற விலையில் விற்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது. இது 8GB RAM , 128 GB ROM சேமிப்பையும் , 6.78 இன்ச் டிஸ்ப்ளேவயும் , ஆண்ட்ராய்டு ஓஎஸ் V15 கொண்டிருக்கும் எனவும், 50MP ப்ரண்ட் கேமராவையும், 5500 mah பேட்டரியையும் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது

ரியல்மி பி3 ப்ரோ 27,990 என்ற விலையில் விற்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது. இது 8GB RAM , 256 GB ROM சேமிப்பையும் , 6.78 இன்ச் டிஸ்ப்ளேவயும் , ஆண்ட்ராய்டு ஓஎஸ் V15 கொண்டிருக்கும் எனவும், 50MP ப்ரண்ட் கேமராவையும், 6000mah பேட்டரியையும் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது