சின்ன திரையில் சிறந்த நடிகை யார்?

2 hours ago
ARTICLE AD BOX

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் சிறந்த கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த நடிகை மற்றும் சிறந்த நடிகருக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் பெரும்பாலும் மக்கள் மனங்களைக் கவர்ந்துள்ளன. சின்ன திரை தொடர்களில் அதிக அளவு டிஆர்பி புள்ளிகளைப் பெறும் தொடர்களாக சன் தொலைக்காட்சித் தொடர்களே உள்ளன. அதாவது அதிக எண்ணிக்கையிலான மக்கள் சன் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கின்றனர்.

குறிப்பாக பிரைம் டைம் எனப்படும் மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர்கள் அதிக பார்வையாளர்களைக் கொண்டுள்ளது. இதனால் அந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடிக்கும் நடிகர்களுக்கு ரசிகர்களும் அதிகரிக்கின்றனர்.

இதனிடையே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் இந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான விருதை நடிகை ஸ்வாதி கொண்டே பெற்றுள்ளார். இவர் மூன்று முடிச்சு தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.

இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே தொடரில் மக்களிடம் பிரபலமாகியிருந்தார். தற்போது மூன்று முடிச்சு தொடரில் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

நியாஸ் கான் / ஸ்வாதி

இதேபோன்று சின்ன திரையில் சிறந்த நாயகனுக்கான விருதை நடிகர் நியாஸ் கான் பெற்றுள்ளார். இவர் மூன்று முடிச்சு தொடரில் நாயகனாக நடிக்கிறார். இதற்கு முன்பு புதுப் புது அர்த்தங்கள் தொடரில் நாயகனாக நடித்திருந்தார். இவர்களுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை மீனாவிடம் விருது பெறும் கயல் ஜோடி

மேலும் இந்த ஆண்டின் சிறந்த மெகா தொடராக கயல் தேர்வாகியுள்ளது. சிறந்த ஜோடியாக கயலாக நடித்துவரும் சைத்ரா ரெட்டியும் எழிலாக நடித்துவரும் சஞ்சீவ் கார்த்தியும் தேர்வாகியுள்ளனர்.

Read Entire Article