சின்ன திரையில் ஒரு பராசக்தி!

3 hours ago
ARTICLE AD BOX

சன் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடருக்கு பராசக்தி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மிஸ்டர் மனைவி தொடரில் இணைந்து நடித்த பவன் - தேப்ஜானி ஜோடி புதிய தொடரில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இத்தொடருக்கு பராசக்தி என்று பெயரிடப்பட்டுள்ளது.

நடிகை தேப்ஜானி மொடாக் ராசாத்தி தொடரின் மூலம் தமிழ் சின்ன திரையில் அறிமுகமானார். பின்னர், வானத்தைப் போல உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் மீண்டும் பவன் சந்திராவுக்கு ஜோடியாக பராசக்தி தொடரில் நடிக்கவுள்ளார். இத்தொடரை விஷன் டைம் நிறுவனம் தயாரிக்கிறது.

மிஸ்டர் மனைவி தொடரில் பவன் - தேப்ஜானி ஜோடியாக நடித்ததன் மூலம் இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் இவர்கள் தொலைக்காட்சி விளம்பரத்தில்கூட ஜோடியாக நடித்தனர்.

இதையும் படிக்க: யோகிபாபுவின் குழந்தைகள் முன்னேற்றக் கழகம்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

இந்த நிலையில், பராசக்தி தொடர் மூலம் மீண்டும் சின்ன திரையில் பவன் - தேப்ஜானி ஜோடி இணைந்துள்ளது. மீண்டும் திரையில் இவர்களைப் பார்ப்பதற்கு ஆவலுடன் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இத்தொடரில் நடிகர் ரமேஷ் கண்ணா, குறிஞ்சி, ராஜா, அஜய் ரத்னம் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நடிகர் ரமேஷ் கண்ணா முன்னதாக ஜீ தமிழில் ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் தொடரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சுதா கொங்காரா இயக்த்தில் நடித்துவரும் புதிய படத்துக்கு பராசக்தி எனப் பெயரிடப்பட்ட நிலையில், சின்ன திரை தொடருக்கும் இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பராசக்தி தொடரின் முன்னோட்டக் காட்சி, ஒளிபரப்பு தேதி குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article