ஜார்க்கண்டில் ஓர் ஆசிரியர் பள்ளிகள் இத்தனையா?

3 hours ago
ARTICLE AD BOX

ஜார்க்கண்டில் 8 ஆயிரம் அரசுப் பள்ளிகள் தலா ஒரு ஆசிரியருடன் செயல்படுவதாக கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில், ஆசிரியர்களின் நெருக்கடி குறித்து சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ ராஜ் டிசன்ஹா கேள்வி எழுப்பினார்.

அதற்கு கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் அளித்த பதிலில்,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவதாகவும், அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

கிட்டத்தட்ட சுமார் 7,930 அரசுப் பள்ளிகளில் தலா ஒரு ஆசிரியருடன் செயல்பட்டு வருவதாகவும், இந்த ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் சுமார் 3.81 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மேலும் 103 பள்ளிகளில் ஒரு மாணவர்களும் இல்லாமல் இயங்குவதாகவும், அவற்றில் 17 ஆசிரியர்கள் மட்டும் பணிபுரிவதாகவும் அவர் கூறினார்.

மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்காக அந்தந்தப் பகுதிகளில் "ஸ்கூல் சலோ அபியான்" முறையில் நாங்கள் பிரசாரத்தை நடத்தி வருகிறோம். மேலும் 26 ஆயிரம் உதவி ஆசிரியர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

Read Entire Article