‘சினிமா புகழை மட்டுமே வைத்து எல்லாவற்றையும் ஓரம்கட்டிவிட முடியாது’

4 hours ago
ARTICLE AD BOX

"சினிமா புகழை மட்டுமே மூலாதாரமாக வைத்து எல்லாவற்றையும் ஓரம்கட்டிவிட முடியாது. தமிழ்நாட்டு மக்கள் விவரமானவர்கள்” என்று விஜய் குறித்த கேள்விக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதில்

திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல். திருமாவளவனிடம், விஜய் தொடங்கியுள்ள கையெழுத்து இயக்கம் யாருக்கு பின்னடைவு என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த திருமா,”விஜய் தேர்தலை எதிர்கொண்டால்தான் மக்கள் அவரை எந்தளவிற்கு ஆதரிக்கிறார்கள் என்பது தெரியும். ஒவ்வொரு காலகட்டத்தில் இப்படி புதியவர்கள் வந்துகொண்டுதான் உள்ளனர். ஆனால், அவர்களால் பெரிதாக சாதிக்க முடியவில்லை.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவைத் தாண்டி கொள்கை அரசியலை பேசுகின்ற கட்சிகள் பல உள்ளன, விசிக உட்பட. எனவே வெறும் சினிமா புகழை மட்டும் மூலாதாரமாக வைத்து எல்லாவற்றையும் ஓரம்கட்டிவிட முடியாது. தமிழ்நாட்டு மக்கள் விவரமானவர்கள். இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வுடன் உள்ளனர். அவர்களை ஏய்த்து விட முடியாது.” என்றார்.

Read Entire Article