சினிமா தொழிலாளிகளுக்கு வீடு.. மொத்த செலவையும் ஏற்ற விஜய் சேதுபதி! - FEFSI அளித்த கௌரவம்!

2 days ago
ARTICLE AD BOX

சினிமா தொழிலாளிகளுக்கு வீடு.. மொத்த செலவையும் ஏற்ற விஜய் சேதுபதி! - FEFSI அளித்த கௌரவம்!

சினிமா கலைஞர்களுக்கு வீடுகட்ட உதவி செய்த நடிகர் விஜய் சேதுபதியின் பெயர் அந்த கட்டிடத்திற்கு சூட்டப்படும் என ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.

 

திரைப்பட தொழிலாளர்கள் நல அமைப்பான FEFSI0க்காக சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் தமிழ்நாடு அரசு நிலம் வழங்கியது. இதில் திரைப்பட தொழிலாளிகளுக்கு வீடுகட்டி வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சினிமா நடிகர், நடிகைகளிடம் நன்கொடைகள் பெறப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, அப்பகுதியில் ஒரு முழு கட்டிடம் கட்ட ஆகும் செலவான ரூ.1.30 கோடியை நன்கொடையாக ஃபெப்சிக்கு அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, விஜய் சேதுபதி அளித்த நன்கொடையில் கட்டப்படும் புதிய அடுக்குமாடி குடியிருப்புக்கு ‘விஜய் சேதுபதி டவர்’ என பெயர் வைக்கப்படும் என அறிவித்துள்ளார். சினிமா தொழிலாளிகளுக்கு விஜய் சேதுபதி செய்துள்ள இந்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

Read Entire Article