ARTICLE AD BOX
இயக்குநர் அருண்குமாரின் திருமண நிகழ்வில் விக்ரம், விஜய் சேபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
2014 ஆம் ஆண்டு பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.யு அருண் குமார். பின்னர் விஜய் சேதுபதி வைத்து சேதுபதி, சிந்துபாத் என இரண்டு படங்களை இயக்கினார். தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு அருண் குமார் இயக்கி சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இட்லி கடையில் அருண் விஜய்! என்ன சமைக்கிறார் தனுஷ்?
இதையடுத்து விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்' என்கிற படத்தை அருண் குமார் இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக வெளியாகும் இப்படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இயக்குநர் அருண் குமாருக்கு இன்று திருமணம் நடைபெற்றது.
இதில் விக்ரம், விஜய் சேதுபதி, சித்தார்த், விக்னேஷ் சிவன், பால சரவணன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமண நிகழ்வின்போது பிரபலங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைராகி வருகிறது.