ARTICLE AD BOX
மத்திய பட்ஜெட் என்பது நம் இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் பெருமைக்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது என நடிகரும் பாஜகவின் பிரமுகருமான சரத்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். இது தொடர்பாக இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த நடிகர் சரத்குமார், நேற்று வெளியான மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா என்று தனித்தனியாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. நம்முடைய ஒட்டு மொத்த நாட்டுக்காக தான் செலவு செய்யப்பட உள்ளது.
இந்தியாவின் பெருமைக்காகவும் வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் முன்னேற்றத்திற்காகவும் தான் இந்த மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் திமுகவை எதிர்ப்பதே தன்னுடைய கொள்கை என்று கூறினால் அதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
தமிழகத்தில் இதற்கு முன்பு இருந்த ஆட்சியாளர்கள் யாரும் மக்களுக்கு இந்த அளவுக்கு வேண்டியதை செய்யவில்லை. அதை நான் செய்கிறேன் என்று விஜய் சொன்னால் அது கொள்கையாக இருக்கும், மக்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் முதலில் சொல்லட்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு திமுகவை எதிர்ப்பது தனது கொள்கை என தோளில் சுமந்து கொண்டு சுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. பேசுவது எதுவாக இருந்தாலும் அதை நன்றாக யோசித்து பேச வேண்டும் என்பதே விஜய்க்கு நான் வழங்கும் அறிவு என்று சரத்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.