ARTICLE AD BOX
சிதம்பரம் அருகே அம்மாப்பேட்டை கிராமத்தில் வீட்டு தோட்டத்திற்குள் புகுந்த முதலையை வனத்துறையினர் பிடித்தனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்தில் உள்ள அம்மாப்பேட்டை கிராமத்தின் தோப்புத்தெரு உள்ள சம்மந்த மூர்த்தி (42) வீட்டு தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் ஒன்று புகுந்தாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
ஜெயலலிதா புகழ் என்றும் நிலைத்திருக்கும்: அண்ணாமலை
இதனையடுத்து கடலூர் மாவட்ட வன அலுவலர் குருசாமி உத்தரவின் பேரில் சிதம்பரம் வனச்சரக அலுவலர் கோ.வசந்த்பாஸ்கர் தலைமையில் சிதம்பரம் பிரிவு வனவர் கு.பன்னீர் செல்வம், சிதம்பரம் பீட் வனக்காப்பாளர் த.அன்புமணி, வன ஊழியர் புஷ்பராஜ ஆகியோர் சம்பவ பகுதிக்கு விரைந்தனர்.
தொடர்ந்து கிராம வீட்டு தோட்டத்தில் புகுந்த சுமார் 13 அடி நீளமுள்ள 550 கிலோ எடையுள்ள முதலையை அவர்கள் பத்திரமாக பிடித்து சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீர் தேக்கத்தில் பாதுகாப்பாக விட்டனர்.