சிட்டாக பறக்கும் ஆர்டர்.. ரூ.13499 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா..ஆஃபரில் ரியல்மி போன்.. எந்த மாடல்?

9 hours ago
ARTICLE AD BOX

சிட்டாக பறக்கும் ஆர்டர்.. ரூ.13499 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா..ஆஃபரில் ரியல்மி போன்.. எந்த மாடல்?

Mobile
oi-Prakash S
| Published: Wednesday, March 12, 2025, 7:56 [IST]

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி பி3எக்ஸ் 5ஜி (Realme P3x 5G) ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் டைமன்சிட்டி சிப்செட், 6000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ரியல்மி பி3எக்ஸ் 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அதன்படி பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 17 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.13499 விலையில் வாங்கிவிட முடியும்.

சிட்டாக பறக்கும் ஆர்டர்.. ஆஃபரில் ரியல்மி போன்.. எந்த மாடல்?

ரியல்மி பி3எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme P3x 5G Specifications): 6.72-இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 × 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், ஆர்மோர்ஷெல் கிளாஸ் (ArmorShell Glass) பாதுகாப்பு, ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rainwater Smart Touch) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) ப்செட் உடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனில் உள்ளது. எனவே இந்த போனில் சிறந்த கேமிங் அனுபவம் கிடைக்கும்.

50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ரியல்மி பி3எக்ஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. பின்பு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் இந்த போனில் உள்ளது.

IP68 + IP69 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் ஆதரவுடன் ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

6000mAh பேட்டரி உடன் ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மிட்நைட் ப்ளூ (Midnight Blue), லூனார் சில்வர் (Lunar Silver) மற்றும் ஸ்டெல்லர் பிங்க் (Steller Pink) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
17 Percent Discount on realme P3x 5G with 6GB Ram in Flipkart Sale Specifications Price
Read Entire Article