சிங்கிளாவே இருந்தா சீக்கிரம் அங்கிள் ஆகிடுவீங்க: ஜெய்யை கலாய்த்த யோகி பாபு

2 hours ago
ARTICLE AD BOX

சென்னை: யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் பி.யுவராஜ் தயாரிக்க, பிரதாப் இயக்கத்தில் சத்யராஜ், ஜெய், பிரக்யா நாக்ரா, யோகி பாபு, பாப்ரி கோஷ், தங்கதுரை, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், கீர்த்தனா நடித்துள்ள படம், ‘பேபி அன்ட் பேபி’. இமான் இசை அமைத்துள்ளார். மிகப்பெரிய குடும்பத்தில் திடீரென்று நுழையும் ஒரு குழந்தையால் ஏற்படும் சம்பவங்களை காமெடியுடன் சொல்லும் கதை கொண்ட இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அப்போது யோகி பாபு பேசுகையில், ‘பிரதாப்பும், நானும் 17 வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடித்தோம். இன்று அவர் இயக்குனர், நான் காமெடி நடிகன். நாம் உண்மையாகவும், கடுமையாகவும் உழைத்தால் நமக்கானது தானாக வந்து சேரும். சத்யராஜும், நானும் எப்போதுமே கவுண்டமணி சார் பற்றி பேசி சிரிப்போம்.

ஜெய்யிடம் நான், ‘இன்னும் எப்படி இளைமையா இருக்கீங்க?’ என்றேன். அவரோ, ‘சிங்கிளாவே இருப்பதால யங்கா இருக்கேன்’ என்றார். ‘ஜெய், சீக்கிரம் அங்கிள் ஆகிடுவீங்க. கல்யாணம் செய் துக்குங்க’ என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று, ஜெய்யை ஜாலியாக கலாய்த்தார். பிறகு சத்யராஜ் பேசும்போது, ‘விஜய், அஜித் குமார் ஆகியோருக்கு ஜோடியாக நடித்த கீர்த்தனா, இதில் எனக்கு ஜோடியாக நடித்துள்ளார். அப்படின்னா, நானும் இன்னும் இளைஞன்தான்’ என்றார்.

Read Entire Article