60 வயதில் ஆமிர் கான் 3வது திருமணம்? 2 காதல் மனைவிகளை விவாகரத்து செய்தவர்

5 hours ago
ARTICLE AD BOX

மும்பை: வரும் மார்ச் 14ம் தேதி ஆமிர் கானுக்கு 60 வயது நிறைவடைகிறது. கடந்த 1986ல் ரீனா தத்தா என்பவரை அவர் திருமணம் செய்தார். இந்த ஜோடிக்கு ஜுனைத் கான் என்ற மகனும், ஐரா என்ற மகளும் இருக்கின்றனர். தற்போது ஜுனைத் கான், இந்தியில் ‘லவ்யப்பா’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இது தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ரிலீசான ‘லவ் டுடே’ என்ற படத்தின் ரீமேக். ஐராவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக ரீனா தத்தாவை கடந்த 2002ல் விவாகரத்து செய்த ஆமிர் கான், பிறகு கிரண் ராவ் என்பவரை திருமணம் செய்தார்.

இந்த ஜோடிக்கு ஆசாத் என்ற மகன் இருக்கிறார். கடந்த 2021ல் தனது 2வது மனைவியை விவாகரத்து செய்த ஆமிர் கான், 2 முறை விவாகரத்து செய்ததன் காரணமாக தற்போது சிங்கி ளாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், தற்போது ஆமிர் கான் வாழ்க்கையில் 3வது காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவரை அவர் காதலித்து வருவதாகவும், விரைவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் பாலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரையிலும் ஆமிர் கான் தரப்பில் இதுகுறித்து எந்த ஒரு விளக்கமும் சொல்லவில்லை.

Read Entire Article